86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் அரியலூர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி ஸ்ரீனிவாசன் ஆய்வு

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி ஸ்ரீனிவாசன் ஆய்வு

அரியலூர் – அக் : 12

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் அரியலூர் மாவட்ட எஸ்.பி ஸ்ரீனிவாசன் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.இவ்வாய்வின் போது காவல்துறையினருக்கு அரசு வழங்கிய உடைமைகளை ஆய்வு செய்தார், மேலும் காவல் நிலையத்தின் சுற்றுப்புற பகுதிகள் மற்றும் காவலர் குடியிருப்புகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தினார். மேலும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், இருசக்கர வாகனங்களை ஓட்டும் போது தலைக்கவசம் அணிய வேண்டும். இதனை பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் அனைத்து கிராம மக்களுக்கும் பாலியல் மற்றும் குழந்தை திருமணம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், பொதுமக்கள் அளிக்கும் புகார்களை சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மேலும் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் சிறப்பாக பணி புரிந்ததற்காக தலைமை காவலர் திவாகர் மற்றும் சுகன்யா ஆகியோருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வெகுமதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் முருங்கை மர கன்றுகளை நட்டு, நூலகத்தை திறந்து வைத்து பராமரிக்க கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் ஆண்டிமடம் காவல் நிலைய ஆய்வாளர் முகமது இத்ரீஸ் மட்டும் காவல் உதவி ஆய்வாளர் மதன்குமார் மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது -...

தற்போதைய செய்திகள்