80.5 F
Tirunelveli
Monday, August 2, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி ‘18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியரிடம் பாலியியல் செயல்பாடு என்பது குற்றமாகும். இதற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்...

‘18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியரிடம் பாலியியல் செயல்பாடு என்பது குற்றமாகும். இதற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற எச்சரிக்கை” விழிப்புணர்வு சுவரொட்டியை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஒட்டி துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

தூத்துக்குடி செப்டம்பர் -16

‘18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியரிடம் பாலியியல் செயல்பாடு என்பது குற்றமாகும். இதற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற எச்சரிக்கை” விழிப்புணர்வு சுவரொட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒட்டி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்புரையாற்றுகையில், தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த வகையான குற்றங்களை தடுப்பதற்கு கடுமையான சட்டங்கள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக 18 வயதிற்குட்டப்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு போக்ஸோ எனும் சட்டம் உள்ளது. இச்சட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை வரை பெற்று கொடுக்க வழிவகை உள்ளது. மேலும் இச்சட்டத்தை பற்றி எல்லோருக்கும் தெரிந்தாலும், கிராமபுரங்களுக்கு இவ்வகையான குற்றங்களுக்கு சட்டம் உள்ளது எனும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது. இந்நிகழ்ச்சியின் நோக்கமே கிராமபுரங்களுக்கும் இவ்விழிப்புணர்வை கொண்டு செல்ல வேண்டும் என்பதாகும். இது பற்றி உடனே புகார் மற்றும் தகவல் தெரிவிக்க 1098 என்ற தொலைபேசி எண்ணை அல்லது காவல்துறை அவசர உதவி எண் 100ஐ தொடர்பு கொள்ளலாம். தகவல் தெரிவிப்பவர்கள், அவர்களைப் பற்றிய விபரம் சொல்லத் தேவையில்லை. அவ்வாறு தெரிவித்தாலும், அவர்களைப் பற்றிய விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்குவதே நமது நோக்கமாகும் என்று கூறினார்.

18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களிடம் பாலியியல் செயல்பாடு என்பது மிகப்பெரிய குற்றமாகும், இது போன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அளிக்கலாம் என்ற எச்சரிக்கை அறிவிப்பு வந்துள்ளது. இந்த எச்சரிக்கை சுவரொட்டிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் ஒட்டப்படுவதுடன், அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மூலம் பொதுமக்களுக்கு இந்த எச்சரிக்கையை அறிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த எச்சரிக்கை சுவரொட்டி ஒட்டும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி, தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் ஜோதி குமார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காசிராஜன், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வனிதா, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மீஹா, தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கபசுர குடிநீர் வழங்கினார்.

19,724FansLike
38FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“கொரனா தொற்றால் உயிரிழந்த போலீசாரின்‌‌‌ உருவபடத்‌‌‌திற்க்கு போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை….

0
சென்னை - ஆகஸ்ட் -01,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 19...

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி சம்பவயிடத்திற்கு விரைந்து...

0
காஞ்சிபுரம் - ஆகஸ்ட் - 01,2021 தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை - 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம்...

மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150,பேருக்கு மாவட்ட எஸ்.பி நிவாரன பொருட்களை வழங்கினார்

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 01,2021 தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புன்னை நகர் பகுதியில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150...

“தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சரகம் கடந்த 27.07.2021 அன்று 17.00 மணிக்கு வீராகான் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக மதுபோதையில் செதலவாடி...

“சாலை விபத்தில் இறந்த போலீசாரின் குடுமபத்திற்க்கு ஐ.ஜி ,மாவட்ட எஸ்.பி நிதியுதவி….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழப்பழுவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பணியின்போது சாலை விபத்தில் இறந்ததால் ஸ்டேட் பாங்க்...

தற்போதைய செய்திகள்