81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி 14 வயது சிறுமியை பாலியல் வன்புனர்வு செய்த வழக்கில் தூத்துக்குடி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் ...

14 வயது சிறுமியை பாலியல் வன்புனர்வு செய்த வழக்கில் தூத்துக்குடி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு

தூத்துக்குடி ஞீவைகுண்டம் -11

கடந்த 2016 ஏபரல் மாதம் நடந்த தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாயர்புரம் கண்ணாடி விளையைச் சேர்ந்த ராமர் மகன் பாக்கியராஜ் (35) என்பவர் 14 வயது சிறுமியை பாலியியல் வன்முறை செய்துள்ளார். இது குறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியராஜை கைது செய்தனர். இவ்வழக்கை ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விமலா என்பவர் புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய பாலியல் வழக்கு குற்றவாளிக்கு தூத்துக்குடி போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 8000 அபராதம் விதித்து தீர்ப்பு. இவ்வழக்கை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல் ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஜெயக்குமார் பாராட்டு.

இவ்வழக்கு தூத்துக்குடி போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய நீதிபதி குமார் சரவணன் இன்று குற்றவாளி பாக்கியராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 8000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விமலா மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலைக் காவலர் ஹெப்சி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

தற்போதைய செய்திகள்