82 F
Tirunelveli
Tuesday, August 3, 2021

நள்ளிரவில் இரு சக்கர வாகனங்களை திருடி வந்த கொள்ளைக் கும்பலை துரத்திச் சென்று 5 மணிநேரத்திற்குள் மூன்று வாகனங்களை பறிமுதல் செய்ததோடு குற்றவாளி ஒருவரையும் கைது செய்த தனிப்படை போலீசாரின் பணியை பாராட்டினார்‌ புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன்

புதுக்கோட்டை செப்டம்பர் -17

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு கரூர் மாவட்டத்தில் இருந்து இருசக்கர வாகனத்தை ( புல்லட் ) திருடிக்கொண்டு புதுக்கோட்டை நோக்கி வருவதாக கிடைத்த தகவல், இலுப்பூர் அருகே பல்சர் வாகனம் மற்றும் குறிப்பிறை அருகே ஹோண்டா ஆகிய மூன்று இருசக்கர வாகனங்கள் திருடுபோனதாக கிடைத்த அடுத்தடுத்து தகவலின்பேரில் புதுக்கோட்டை கூடுதல் எஸ்பி ராஜேந்திரன் புதுக்கோட்டை காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் புதுக்கோட்டை மாவட்ட இரவு ரோந்து அதிகாரி மாவட்ட குற்ற ஆவணக் கூடம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இரவு ரோந்து அதிகாரிகளையும் அறிவுறுத்தி அனைத்து இடங்களிலும் வாகன சோதனை நடத்தப்பட்டது .

இதற்கிடையே புதுக்கோட்டை மாலையீடு அருகில் காவல்துறையை கண்டவுடன் நிற்காமல் வேகமாக சென்றவர்களை காவல்துறையினர் துரத்தி சென்றபோது அவர்கள் பொன்னமராவதி நோக்கி வேகமாக சென்றுவிட்டனர் . அவர்களை பிடிக்க பின்னால் துரத்தி சென்றுள்ளனர். மேலும் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் பொன்னமராவதி பூலாம்பட்டி அருகே பனையப்பட்டி காவல் ஆய்வாளர் . பத்மா அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் சோதனையில் கரூர் மாவட்டம் அருகாம்பாலையத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் ஆகாஷ் என்பவரை புதுக்கோட்டை காவல்துறையினர் விரட்டி பிடித்தனர் . மற்ற 5 நபர்கள் வாகனத்தை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். மேற்படி ஆகாஷ் என்பரிடமிருந்து 1) TN 49 AJ 944 ராயல்என்பீல்டு 2) TN 55 BB 5730 டியோ 3) TN 55 AR 6955 பல்சர் ஆகிய மூன்று இரு சக்கர வாகனங்களை கைப்பற்றியுள்ளனர் .

தப்பிச்சென்ற மற்ற எதிரிகளை காவல்துறை தனிப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.விசாரணையில் பிடிபட்ட ஆகாஷ் மீது கரூர் மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது

மேற்படி திருடுபோன மூன்று இருசக்கர வாகனங்களை திருடப்பட்ட 5 மணிநேரத்திற்குள் கைப்பற்றியும் , எதிரியை பிடிக்க துரிதமாக செயல்பட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், டிஎஸ்பி சோமசுந்தரம் , காவல் ஆய்வாளர்கள் பத்மா , அழகம்மாள் , உதவி ஆய்வாளர்கள் குணசேகரன் மற்றும் பிரகாஷ் , ரோந்து காவலர்கள் செபாஸ்டீன் மற்றும் மணிகண்டன் ஆகியோர்களின் பணியை பாராட்டும் விதமாக புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் நற்பணி சான்றிதழ்கள் வழங்கி பாராட்டியுள்ளார்‌

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி ஆய்‌‌‌வு

0
தென்காசி - ஆகஸ்ட் -03,2021 தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்...

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

தற்போதைய செய்திகள்