76 F
Tirunelveli
Sunday, December 5, 2021
முகப்பு மாவட்டம் திண்டுக்கல் வீட்டிற்குள் புகுந்து 30லட்சம்‌ மதிப்புள்ள ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடிய இரண்டு நபர்களை...

வீட்டிற்குள் புகுந்து 30லட்சம்‌ மதிப்புள்ள ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடிய இரண்டு நபர்களை டிஎஸ்பி அசோகன் தலைமையில் உள்ள தனிப்படை சுற்றி வளைத்து கைது செய்தது

திண்டுக்கல் செப்டம்பர் -16

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேடபட்டியில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ராஜம்மாள் என்பவர் தனது உறவினரை பார்க்க வந்துள்ளார். 11ம்தேதி அன்று தனது உறவினர் சாந்தி என்பவரின் வீட்டில் தங்கியுள்ளார். அன்று இரவு தனது குடும்பத்தாரின் 73,1/2 சவரன் தங்க நகைகள், மற்றும் பணம் ரூபாய் 95,000/-ம், செல்போன் மற்றும் ஒரு வாட்ச் ஆகியவற்றை வீட்டில் ஒரு பையில் வைத்துவிட்டு தூங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்க்கும் பொழுது நகைப்பை காணாமல் போயிருந்தது. இது தொடர்பாக செம்பட்டி காவல் நிலையத்தில் ராஜம்மாள் புகார் கொடுத்தார்.

புகாரைத் தொடர்ந்து. ஒட்டன்சத்திரம்‌ டிஎஸ்பி அசோகன் அறிவுறுத்தலின்படி செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் எஸ் ஐ நாராயணன் மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவு தலைமை காவலர்கள்
சீனிவாசன்,
ஞானவேல்.
முதல் நிலை காவலர்கள் வேளாங்கண்ணி
மாரீஸ்வரன் மற்றும் நிலையம் முதல்நிலை காவலர்
பிரபுராஜன் மற்றும் மாவட்ட கணினி குற்றப்பிரிவு போலீசாரின் உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியது
சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த சந்திரன்(70) மற்றும் அவருடைய மகன் பாண்டி என்பவரென தெரியவந்தது. இதனையடுத்து விரைந்து சென்ற போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு பிரிவு 457,380 பிரிவின் படி வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட 30,45,800/- ரூபாய் மதிப்புள்ள அனைத்து பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

19,724FansLike
55FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ரவுடிகளின்‌‌‌ செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட எஸ்பி தனிப்படை அமைப்பு

0
திண்டுக்கல் - டிச - 04,2021 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்கவும் அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் சிறப்பு தனிப்படைகள் - திண்டுக்கல் மாவட்ட காவல்...

மகளுக்‌‌‌கு பாலியல் தொந்‌‌‌தரவு – தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ் எஸ்பி அதிரடி...

0
அரியலூர் - டிச -04,2021 காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை: சிறுமியிடம் பாலியல் சீண்டல்கள் செய்த தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் தந்தையே தனது மகளை தொடர்ந்து பாலியல் சீண்டல்கள்...

கல்லூரி மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

0
திருவாரூர் - டிச -04,2021 விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌவுரவிப்பு மன்னார்குடி நகர...

சிசிடிவி கேமரா கண்காணிப்பு நகரமாக மாறிவரும் சேலம் – போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
சேலம் - டிச - 04,2021 சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய சரகத்தில் உள்ள ரெட்டிப்பட்டி, மாமாங்கம், குரங்குசாவடி, சங்கர் தியேட்டர், ஸ்டேட் பாங்க் காலணி, ஸ்வர்ணபுரி அனெக்ஸ், இந்திரா நகர், நகர்மலை...

காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில்‌‌‌ நடைபெற்றது

0
திருப்பத்தூர் - டிச - 03,2021 மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப காவல் பணியில் தரத்தினை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான இடைவெளியை போக்கவும் பணியின் தரத்தினை அளவிடுவது இன்றியமையாததாகும். திருப்பத்தூர் மாவட்ட காவல்...

தற்போதைய செய்திகள்