76 F
Tirunelveli
Sunday, December 5, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போது ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கான பேரிடர்...

வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போது ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கான பேரிடர் மீட்புப் படை பயிற்சி பெற்ற வீரர்கள் மற்றும் பேரிடர் பாதுகாப்பு உபகரணங்களை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு

தூத்துக்குடி செப்டம்பர் -17

வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போது ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கான பேரிடர் மீட்புப் படை பயிற்சி பெற்ற வீரர்கள் மற்றும் பேரிடர் பாதுகாப்பு உபகரணங்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கும் சூழ்நிலை உள்ளதால், வெள்ளம் மற்றும் புயல் வந்தால் ஆபத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக என்னென்ன பொருட்கள் இருக்கிறது. அவைகளின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பது என்பதையும், மாநில பேரிடர் மீட்பு படை பயிற்சி பெற்ற காவலர்கள் தயார் நிலையில் உள்ளனரா என்பதையும் இன்று மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

இந்த பேரிடர் மீட்புப் படையினர் தூத்துக்குடி மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளனர். இப்படையில் காற்றடைத்து இயந்திர விசையுடன் செல்லக்கூடிய படகுகள், காற்றடைத்து வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் வலுவான தூக்குப்படுக்கைகள் முதலுதவி பெட்டி, ஒளிரும் சட்டைகள், பாதுகாப்புச் சட்டை, கடப்பாறை, மண்வெட்டி, அரிவாள், நைலான் கயிறு, பாதுகாப்பு தலைக்கவசம், மரம் அறுக்கும் இயந்திரம், ஒலி பெருக்கி உட்பட 24 வகை உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் பேசுகையில், கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி, அதில் மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகள் தாழ்வான பகுதிகள், மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை தெரிவித்துள்ளார். அவ்வாறு தெரிவித்துள்ள பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு ஏற்கனவே அறிவிப்பு கொடுத்து தயார் நிலையில் வைத்திருக்கிறோம். இந்த மாநில பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற காவலர்கள் மற்றும் பேரிடம் மீட்பு உபகரணங்களை இன்று அந்தந்த காவல் நிலையங்களுக்கு அனுப்பிவிடுவோம். எந்த வித வெள்ளம் வந்தாலும் கூட உடனடியாக மக்களை அல்லது உயிரினங்களை காப்பாற்றுவதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தயார் நிலையில் இருக்கிறது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் ஆய்வின்போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன், உடனிருந்தார். தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் தலைமையில் பேரிடர் மீட்பு படையினர் தங்கள் உபகரணங்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன் செயல்முறை விளக்கமளித்தனர்.

19,724FansLike
55FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ரவுடிகளின்‌‌‌ செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட எஸ்பி தனிப்படை அமைப்பு

0
திண்டுக்கல் - டிச - 04,2021 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்கவும் அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் சிறப்பு தனிப்படைகள் - திண்டுக்கல் மாவட்ட காவல்...

மகளுக்‌‌‌கு பாலியல் தொந்‌‌‌தரவு – தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ் எஸ்பி அதிரடி...

0
அரியலூர் - டிச -04,2021 காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை: சிறுமியிடம் பாலியல் சீண்டல்கள் செய்த தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் தந்தையே தனது மகளை தொடர்ந்து பாலியல் சீண்டல்கள்...

கல்லூரி மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

0
திருவாரூர் - டிச -04,2021 விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌவுரவிப்பு மன்னார்குடி நகர...

சிசிடிவி கேமரா கண்காணிப்பு நகரமாக மாறிவரும் சேலம் – போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
சேலம் - டிச - 04,2021 சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய சரகத்தில் உள்ள ரெட்டிப்பட்டி, மாமாங்கம், குரங்குசாவடி, சங்கர் தியேட்டர், ஸ்டேட் பாங்க் காலணி, ஸ்வர்ணபுரி அனெக்ஸ், இந்திரா நகர், நகர்மலை...

காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில்‌‌‌ நடைபெற்றது

0
திருப்பத்தூர் - டிச - 03,2021 மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப காவல் பணியில் தரத்தினை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான இடைவெளியை போக்கவும் பணியின் தரத்தினை அளவிடுவது இன்றியமையாததாகும். திருப்பத்தூர் மாவட்ட காவல்...

தற்போதைய செய்திகள்