80.6 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி ரவுடிகள் ஒழிப்பில் நெல்லை எஸ்பி மணிவண்ணன் தீவிரம்.

ரவுடிகள் ஒழிப்பில் நெல்லை எஸ்பி மணிவண்ணன் தீவிரம்.

செப்டம்பர் -04

மதுரை எஸ்பி யாக பணியாற்றி வந்தநிலையில் திருநெல்வேலி எஸ்பியாக ஜீலை 15 ல் மாறுதலாகி வந்துள்ளார் மணிவண்ணன். பதவியேற்ற ஒருமாத காலத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கஞ்சா , கள்ளச்சாராயம், மணல் கொள்ளை, ரவுடிசம் , கட்டபஞ்சாயத்து, ஜாதி மத மோதல்கள் போன்ற பெரிய குற்றங்களை தடுக்கும் விதமாக தனித்தனியாக ரகசிய தனிப்படை அமைத்து கண்காணி த்துவருகிறார். இதைவிட மேலாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களை தடுப்பதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். சேரன்மகாதேவி மற்றும் தாழையூத்து இதுபோன்ற அதிகப் படியான குற்றங்கள் நடக்கும் பகுதிகளில் ரகசிய குழுக்கள் அமைத்து ஜாதி மத மோதல்கள் மற்றும் கூலிப் படையினரின் நடவடிக்கைகள் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறார் திருநெல்வேலி மாவட்டத்தில் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களில் சுமார் 20க்கும் மேற்பட்டோர்மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார். இவர் பழக மென்மையானவர்.சிந்தனையிலும் செயல்களிலும் வேகத்தை காட்டுவது இவரின் தனிச் சிறப்பு.சட்டம் ஒழங்கை பாதிக்கும் விவகாரங்களில் யாருடனும் சமரசம் செய்யமாட்டார்‌. இவர் தமிழகத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் , தர்மபுரி, திருப்பூர் மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, வேலூர், போன்ற பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்தவர். அதிகமாக எந்த மாவட்டத்திலும் ஒரு வருடத்திற்க்கு மேலாக வேலைசெய்ததே இல்லை அந்த அளவிற்கு அரசியல் குறுக்கீடுகளுக்கு அடிபணியாதவர். இவர் 1969 ஆம் ஆண்டு அப்பொழுது நாகப்பட்டிணம் மாவட்டமாகவும் தற்போது மயிலாடுதுறை மாவட்டமாகவும் உருவாகியுள்ள தத்தன்குடி கிராமத்தில் பூர்வீக விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.தனது ஆரம்பக் கல்வியை கடலூர் ஜென்ஜோசப் பள்ளிகூடத்தில் படித்தார்.பிறகு 5 முதல் 10 ஆம் வகுப்புவரை மங்கதநல்லூர் கே எஸ் ஒ பள்ளியில் படித்தார். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.தனது கல்லூரிப் படிப்பை ஏவிசி கல்லூரியில் சேர்ந்து பிஏ வரலாறு பிரிவை தேர்வுசெய்து படித்தார். மேல்படிப்பான எம் ஏ வரலாறு பட்டப் படிப்பை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார்.

பிறகு சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். பிறகு குருப் 1 தேர்வு எழுதி வெற்றிப் பெற்று 2001 பேஜ் டிஎஸ்பியாக தேர்வானார். 2002 ஆம் ஆண்டு தஞ்சாவூர் கும்பகோணம் பகுதியில் பயிற்சி டிஎஸ்பியாக பணிசெய்தார். பிறகு மதுரை சிட்டி சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக தனது காவல்பணியை துவங்கினார். அங்கு மூன்று ஆண்டுகள் 2006 வரை பணிபுரிந்தார் அதன் பிறகு . இரண்டு மாதங்கள் பட்டாலியன் பிரிவில் டிஎஸ்பியாக பணிபுரிந்தார். அதே ஆண்டு தர்மபுரி மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பியாக 5 மாதங்கள் பணிபுரிந்தார். 2007 ஆம் ஆண்டு திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உதவி ஆணையராக சுமார் 4 மாதங்கள் பணிபுரிந்தார். பிறகு அதே ஆண்டு புதுக்கோட்டை டிஎஸ்பியாக மாறுதலாகி சென்று அங்கு சுமார் 5 மாதங்கள் பணிபுரிந்தார்.

பிறகு அதே ஆண்டு மதுரை கண்ட்ரோல் ரூம் ஏசி யாக ஒரு மாதம் பணிபுரிந்தார். பிறகு அதே ஆண்டு புதுக்கோட்டை டிஎஸ்பியாக 2 மாதங்கள் பணிபுரிந்தார். பிறகு அதே ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை சுமார் ஓர் ஆண்டு திருப்பூர் டிஎஸ்பியாக பணிபுரிந்தார். பிறகு அதே ஆண்டு பணி மாறுதலாகி

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 3 மாதங்கள் பணிபுரிந்தார். 2009 ஆண்டு ஏடி எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். 2009 முதல் 2010 வரை வேலூரில் மதுவிலக்குப் பிரிவு ஏடிஎஸ்பியாக பணிசெய்தார். 2010 ஆம் ஆண்டு முதல்2011 வரை நாகை மாவட்ட கடலோர காவல்படை ஏடிஎஸ்பியாக பணிபுரிந்தார். பிறகு அதே ஆண்டு முதல் 2012 வரை நாகை மதுவிலக்குப் பிரிவு ஏடிஎஸ்பியாக பணிசெய்தார். 2012 ஆம் ஆண்டு எஸ்பி யாக பதவி உயர்வு பெற்றார். அதே ஆண்டு ஐபிஎஸ் கிரேடு பட்டத்தையும் பெற்றார்.

2012 ல் பணி மாறுதலாகி நெல்லை மாநகர துணை கமிஷ்னராக 5 மாதங்கள் பணிபுரிந்தார். பிறகு 2012ஆம் ஆண்டு அங்கிருந்து பணி மாறுதலாகி 2016ஆம் ஆண்டு வரை சுமார் 3 ஆண்டுகள் கன்னியாகுமரி எஸ்பியாக பணிபுரிந்தார். பின்பு அங்கிருந்து மாறுதலாகி 2016 முதல் 2017 ஓராண்டு ராமநாதபுரம் எஸ்பியாக பணியாற்றினார். பிறகு 2017 ஆம் ஆண்டு பணிமாறுதலாகி மதுரை மாநகர துணை கமிஷ்னராக சுமார் 3 மாதங்கள் பணிபுரிந்தார்.

பிறகு அதே ஆண்டு பணிமாறுதலாகி அதே மதுரை மாவட்ட எஸ்பியாக 2020 ஜீலை வரை பணி செய்தார். 2020 ஆம் ஆண்டு ஜீலை 15 ம் தேதி முதல் திருநெல்வேலி எஸ்பியாக பணியை துவங்கியுள்ளார். அவரின் காவல்துறை பயணங்களில் அதிக இடங்களில் குறைவான மாதங்களே பணிபுரிந்துள்ளார் எந்த அரசியல் குறுக்கீடுகளுக்கும் அஞ்சமாட்டார். அடிக்கடி பணி மாறுதல்கள் என்பது நமது நேர்மையான உழைப்பிற்க்கு கிடைக்கும் பரிசு என்றே நினைக்கக்கூடியவர்.இருந்த இடத்தில் இருந்து கொண்டே மாவட்டத்தில் உள்ள டிஎஸ்பிக்களையும் இன்ஸ்பெக்டர்களையும் பம்பரமாக சுற்றவைக்கும் ஆற்றல் கொண்டவர். எந்த அதிகாரிகளை எப்படி வேலை செய்ய வைக்கவேண்டும் என்ற வித்தை அறிந்தவர். திருநெல்வேலி மாவட்டத்திற்க்கு நல்ல சாய்ஸ் எஸ்பி மணிவண்ணன் என்று காவல்துறை மற்றும் பொதுமக்கள் கூறிவருகின்றனர்

  • தொடரும்…
19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்