82 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு தமிழ்நாடு முதல் பணியில் முத்திரை பதித்தவர் டிஎஸ்பி பாரத்

முதல் பணியில் முத்திரை பதித்தவர் டிஎஸ்பி பாரத்

தூத்துக்குடி செப் -26

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சப்டிவிஷன் டிஎஸ்பியாக பாரத் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய நிலையில் சென்னை வணிக குற்ற புலனாய்வு பிரிவிற்க்கு மாறுதலாகி செல்கிறார் இவர் திருச்செந்தூரில் டிஎஸ்பியாக பணியாற்றிய காலத்தில் பொதுமக்களின் நன்மதிப்பை குறுகிய காலத்தில் பெற்றவர்

பொதுமக்கள் புகார் சம்மந்தமாக இவரை எந்த நேரத்தில் அனுகினாலும் அவர்களின் பிரச்சனைகளை முழுவதுமாக கேட்டு அந்த பிரச்சனைக்களுக்கு உடனடியாக தீர்வு கொடுக்ககூடியவர் அதனால் பொதுமக்களின் முழு நம்பிக்கையை பெற்றிருந்தார் பொதுமக்களிடத்தில் நட்புடனும் மிகுந்த மரியாதையுடனும் பழககூடியவர் இவர் திருச்செந்தூர் வாழ் பொதுமக்களின் செல்லப்பிள்ளையாகவே பார்க்கபட்டவர்

சிறுவயதிலிருந்தே காவல்துறை பணியினை இலக்காக கொண்டவர் 1989 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்தார் தனது ஆரம்ப கல்வி முதல் 12 வகுப்புவரை விழுப்புரத்தில் உள்ள செகரேட்ஹார்ட் கான்வென்ட்டில் படித்தார் பிறகு மேல்படிப்பை சென்னை ஜேபியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார் பிறகு மூன்று ஆண்டுகள் விமானதுறையில் பணியாற்றினார் தமிழ் ஆங்கிலம் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர் இவர் ஓரு ஹாக்கி விளையாட்டு வீரர் மற்றும் இவர் ஒரு மோட்டிவேட் ஸீபீச்சரும் கூட மாணவர்களுக்கு தேர்வு குறித்து பயத்தை போக்கும் விதமாகவும் எதிர்கால கல்வி குறித்த ஆலோசனைகளையும் பல கல்லூரிகளில் விழிப்புனர்வு கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்

குருப் 1 தேர்வு எழுதி 2017 பேட்ச் டிஎஸ்பி யாக தேர்வாகினார் 2018 ஆம் ஆண்டு பயிற்சி டிஎஸ்பியாக திண்டுக்கல்லில் பணி முடித்து 2019 ஆம் ஆண்டு தனது முதல் காவல்துறை பணியினை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் துவங்கினார் இவர் துவக்கத்தில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை செய்துவந்தார் இவரது சப்டிவிஷனில் உள்ள அமலிநகர் என்ற மீனவ கிராமத்தில் இரு குழுவினரிடையே எப்போதுமே மோதல் இருந்து வந்தது ஆணால் இவர் பொறுபேற்ற கொஞ்ச நாட்களில் இரு குழுவினடையே சமரசம் செய்வதற்க்கு பல்வேறு முயற்ச்சிகள் எடுத்தார்‌ பீஸ் கமிட்டி அமைத்து இருவரும் ஒன்றினைந்து ஊரின் முன்னேற்றத்திற்க்கு பல வழிகளில் ஆலோசனைகள் வழங்கி இரு குழுவினரிடத்தில் ஒற்றுமையை உருவாக்கி அமளிக்கு குறைவில்லாத அமலி நகரை அமைதி நகராக மாற்றினார் அமலி நகர்மக்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்றார் பிறகு இவருக்கு அமலி நகர் ஊர் மக்கள் சார்பில் பாராட்டு விழாவும் நடைபெற்றது

நோ ஹெல்மெட் நோ பெட்ரோல் என்ற திட்டத்தினை உருவாக்கி திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் பேசி இனி யாராவது ஹெல்மெட் அணியாமல் வந்தால் அவர்களுக்கு பெட்ரோல் வழங்ககூடாது என்ற உத்தரவை பிறப்பித்தார் இந்த உத்தரவால் திருச்செந்தூர் பகுதிகளில் அனைவரும் ஹெல்மெட் கட்டாயம் போடவேண்டிய நிலைக்கு தள்ளபட்டனர் இந்த உத்தரவு தமிழகமெங்கும் முன்மாதிரி உத்தரவாக பேசபட்டது
அதோடு மட்டுமல்லாமல் இந்த புது முயற்சி பொதுமக்கள் மத்தியிலும் சமுக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது

பிறகு உலக புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா இவரது பகுதியில் தான் வருகிறது சுமார் 10 நாட்கள் நடக்கும் திருவிழா இது இதில் சுமார் 12 லட்ச்சத்திற்க்கும் மேலான மக்கள் கலந்து கொள்வார்கள் இவரின் புதிய நடவடிக்கையால் தசரா திருவிழா பொதுமக்களும் பக்தர்களும் புத்துனர்ச்சியுடன்‌ கொண்டாடினார்கள் தசாரா திருவிழா வருவதற்க்கு சுமார் ஒரு மாதத்திற்க்கு முன்பாகவே தசாராவில் வேடம் அனிந்து வரும் குழுக்களை அழைத்து உண்மையான ஆயதங்கள் யாரும் கொண்டுவரக்கூடாது அட்டையில் செய்யும் ஆயுதங்களைதான் வேடத்திற்க்கு பயன்படுத்தபடவேண்டும் பிறகு எந்த கட்சி கொடியோ அல்லது ஜாதி கொடியோ பயன்படுத்தகூடாது என்று உத்தரவு போட்டார் நகை திருட்டு குழந்தைகள் கடத்தல் மற்றும் குழந்தைகள் ஏதும் தொலைந்துவிடகூடாது என்பதற்க்காக கைகளில் அடையாளத்திறக்காக கைகளில் டேக் சிஸ்டத்தை உருவாக்கி குழந்தைகள் தொலைவதை தடுத்தார் பிறகு ஒருவழிபாதை முறையை முதன்முதலில் இவர்தான் அறிமுகம் செய்தார் இதனால் முழுவதுமாக வாகன் நெரிசல் மறறும் மக்கள் நெரிசலும் எந்தவித சிரமும் இல்லாமல் கோவிலுக்கு செல்லவோ வரவோ முடிந்தது இவரின் செயல்முறையை பாராட்டி தசரா நாயகன் டிஎஷ்பி பாரத் என்று பொதுமக்கள் சார்பில் வால்போஸ்டர்கள் அடித்து ஒட்டினார்கள்

ஈ பீட் வாகன் சோதனை முறையை இவர்தான் தமிழகத்தலே முதன் முதலில் அறிமுகம் செய்தார் இவரின் கட்டுபாட்டில் உள்ள அனைத்து பைக் மற்றும் கார் பேட்ரோல் வாகனத்தில் உள்ள போலீசாரின் மொபைல் போனில் உள்ள லொக்கேஷன் ஆஃப் டவுன்லோடு செய்யபட்டு டிஎஸ்பிக்கு சேர் செய்யவேண்டும் எந்த காவலர் எந்த இடத்தில் இருந்து வேலை செய்கிறார் என்ற தகவலை டிஎஸ்பி அவரின் மொபைல் போனில் பார்த்து கொண்டே இருப்பார் போலீசார் ஓடவும் முடயாது ஒழியவும் முடியாது பொய் சொல்லவும் முடியாது இந்த ரோந்து பணிகளில் 24 மணிநேரமும் ஈடுபடும் உள்ள காவலர்களின் இருக்கும் இடத்தை துல்லியமாக காட்டிவிடும் இந்த சிஸ்டத்தால் தான் போலீசார் விழிப்புடன் செயல்பட்டனர் அப்போதுதான் ஆத்தூர் அருகே 300 கிலோ கஞ்சா பிடிபட்டது

2015 ஆம் ஆண்டு கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் தடயம் எதுவும் இல்லாமல் நடைபெற்ற இரட்டை கொலையில் குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாமல் கைவிடபட்ட வழக்கை மீண்டும் விசாரனைக்கு எடுத்து குற்றவாளியை கைது செய்தார்‌ அதேபோல் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கொலை செய்யபட்டு கிடந்த நிலையில் அதிலும் தடயம் எதுவும் இல்லை அந்த பெண் யாரென்று தெரியாத நிலையில் சிறப்பாக புலாணாய்வு செய்து அந்த பெண் யாரென்றும் கண்டுபிடித்து குற்றவாளியையும் சேர்த்து கண்டுபிடித்து கைது செய்தார்
திருச்செந்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாடுவதற்க்கு விளையாட்டு பொருட்கள் இல்லாத நிலையில் இவரின் தனிபட்ட முயற்சியால் ரூ 1 லட்ச்சத்தி முப்பதாயிரம் மதிப்பில் பொருட்களை வழங்கினார்‌

இதுவரை முரளிரம்பா அருண்பாலகோபாலன் ஜெயக்குமார் ஆகிய மூன்று எஸ்பிகளிடத்தில் பணியாற்றி ஆக்டிவ் டிஎஸ்பி என்ற பெருமையை பெற்றுள்ளார்‌ ஆணடு தோறும் சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும் சிறந்த டிஎஸ்பிக்கான விருதை 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டு வருடமும் இவரே பெற்றார்‌ திருச்செந்தூர் பகுதிகளில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைபொருட்களை விற்பனை செய்வதை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டது அந்த தனிப்படை கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தான் 2 கோடி மதிப்புள்ள சரஸ் என்னும் பதப்படுத்தப்பட்ட கஞ்சா பிடிபட்டது

திருச்செந்தூரில் மிகவும் பிரதிஷ்டை பெற்ற சஷ்டி திருவிழாவை சிறப்பாக கையான்டார் சுமார் ஒரே நாளில் 7 லட்ச்சம் பேர் கலந்துகொள்ளும் விழாவில் எந்த அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் மிகவும் சிறப்பாக பாதுகாப்பு பணிகளை செய்துமுடித்தார் முன்பு உள்ள காலத்தில் சுமார் 5 கிலோமீட்டருக்கு முன்பாகவே பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பகதர்கள் நடந்து செல்லும் நிலைதான் இருந்தது அதனால் மக்கள் மிகவும் சிரமபட்டார்கள் இவரின் மனிதாபிமான முயற்ச்சியால் வாகனங்கள் தடுத்து நிறுத்தபட்ட இடத்தில் பொதுமக்கள் கோவில் உள்ளே செல்வதற்க்கு தனி வாகனம் அமைத்து கொடுத்தார் அதனால் மக்கள் சிரமமின்றி கோவிலுக்கு செல்ல முடிந்தது

காயல்பட்டினத்தில் இளைஞர்கள் லைசென்ஸ் இல்லாமல் பைக் மற்றும் கார் ஓட்டுகிறார்கள் என்று தொடர்ந்து புகார் வரவே ஆர்டிஓ இன்ஸ்பெக்டர் மூலமாக ஒரு லைசன்ஸ் முகாம் ஒன்றை நடத்தி அனைவருக்கும் லேனர் வழங்கினார் லேனருக்கு தனாக முன்வந்து முகாம் நடத்தியது இவரின் தனிபட்ட முயற்சியே

கொரனா ஊரடங்கு காலத்தில் சமுக ஆர்வலர்களுடன் இனைந்து ஏழை மக்கள் மற்றும் உனவின்றி தவித்த மக்களுக்கு தினமும் 5000 பேருக்கு இருவேளை உனவளித்தார் மனிதநேயத்தையும் சமுக அக்கறையும் நிருபித்துகாட்டினார்

போதையில் வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு அபாராதம் விதிக்காமல் அவர்கள் குடிபழக்கத்தில் இருந்து விடுபட ஆல்ஹகால் அலாமிஸ் என்ற அமைப்பின் மூலமாக ஒருவாரம் பயிற்சி கொடுக்கபடும் அந்த பயிற்சி முடிவுற்ற பிறகே அவரின் வாகனம் அவரிடம் ஒப்படைக்கபடும் இப்படி பல்வேறு சமுக சீர்திருதங்களை செய்தவர் இவர் பணியாற்றிய இரண்டு வருடத்தில் இவர் எல்லைக்குட்பட்ட பகுதியில் எந்த ரவுடிகள் கொலையும் இல்லை ரவுடிகளால் யாரும் கொள்ளபடவும் இல்லை பழிக்கு பழியான கொலை மற்றும் ஜாதி மதம் சாரந்த மோதல்களை உருவாக்கும் கொலைகள் எதுவும் இல்லாத அமைதி பூங்காவாக திருச்செந்தூர் பகுதியை வைத்திருந்த பெருமை இவருக்கு உண்டு

அதிகாரிகளுக்கு இடமாறுதல் உத்தரவு வந்தால் அவர்களுடன் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் பிரிவு உபசார விழா நடத்துவது இயல்பு ஆணால் டிஎஸ்பி பாரத்திற்க்கு பொதுமக்கள் அனைத்து கட்சிகள் மற்றும் வணிகர் சங்கங்கள் என அனைவரும் ஒன்றினைந்து பிரியமுடியாத வேதனையில் பிரிவு உபசார விழா நடத்தினார்கள் பொதுமக்கள் ஒன்றினைந்து ஒரு காவல்துறை அதிகாரிக்கு பிரியா விடை கொடுப்பது இதுவே முதல்முறை மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றுவிட்டார் டிஎஸ்பி பாரத்

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி ஆய்‌‌‌வு

0
தென்காசி - ஆகஸ்ட் -03,2021 தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்...

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

தற்போதைய செய்திகள்