80.5 F
Tirunelveli
Monday, August 2, 2021
முகப்பு தமிழ்நாடு மனிதநேயத்தின் ஊற்று தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் பொதுமக்கள் புகழாரம்

மனிதநேயத்தின் ஊற்று தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் பொதுமக்கள் புகழாரம்

தூத்துக்குடி செப்டம்பர் -18

ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்படி பகுதியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் குழந்தைகளுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பளர் ஜெயக்குமார் இன்று நிதியுதவி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்படி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி செங்கமலம் (47) என்பவர் கடந்த 12 ம் தேதி அன்று கொலை செய்யப்பட்டார். இது குறித்து ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். அதன்படி தனிப்படையினர் சம்மந்தப்பட்ட 2 குற்றவாளிகளை கண்டுபிடித்து 12 மணி நேரத்தில் விரைந்து கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட செங்கமலத்தின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். செங்கமலத்திற்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இவர்கள் தற்போது குழந்தைகள், அவர்களது பெரியம்மா அஷ்டலெட்சுமி அவர்களின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். அந்த குழந்தைகளுக்கு ஏதாவது நிதியுதவி செய்ய வேண்டும் என்ற மனிதாபிமான அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் பணம் ரூபாய். 70,000 ம் வழங்கினார். மேலும் குழந்தைகள் மூவரின் படிப்புச் செலவையும் ஏற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வின்போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

19,724FansLike
38FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“கொரனா தொற்றால் உயிரிழந்த போலீசாரின்‌‌‌ உருவபடத்‌‌‌திற்க்கு போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை….

0
சென்னை - ஆகஸ்ட் -01,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 19...

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி சம்பவயிடத்திற்கு விரைந்து...

0
காஞ்சிபுரம் - ஆகஸ்ட் - 01,2021 தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை - 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம்...

மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150,பேருக்கு மாவட்ட எஸ்.பி நிவாரன பொருட்களை வழங்கினார்

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 01,2021 தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புன்னை நகர் பகுதியில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150...

“தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சரகம் கடந்த 27.07.2021 அன்று 17.00 மணிக்கு வீராகான் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக மதுபோதையில் செதலவாடி...

“சாலை விபத்தில் இறந்த போலீசாரின் குடுமபத்திற்க்கு ஐ.ஜி ,மாவட்ட எஸ்.பி நிதியுதவி….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழப்பழுவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பணியின்போது சாலை விபத்தில் இறந்ததால் ஸ்டேட் பாங்க்...

தற்போதைய செய்திகள்