81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு பணியின் போது வீரமரணம் அடைந்த சுப்பிரமணியன் 16 வதுநாள் நினைவு அஞ்சலி எஸ். பி ஜெயக்குமார்...

பணியின் போது வீரமரணம் அடைந்த சுப்பிரமணியன் 16 வதுநாள் நினைவு அஞ்சலி எஸ். பி ஜெயக்குமார் அனுசரிப்பு

செப்டம்பர் 2

வீர மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வீரர் சுப்பிரமணியன் அவர்களுக்கு 16 வது நாள் நினைவு அஞ்சலி தமிழ்நாடு அனைத்து ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்கம், தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 18.08.2020 அன்று துரைமுத்து என்ற ரவுடியை பிடிக்கச் சென்றபோது, ரவுடி தன் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசியதில் காவலர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்கள் வீர மரணமடைந்தார். அவர் வீரமரணமடைந்து இன்று (02.09.2020) 16வது தினம் என்பதால் தமிழ்நாடு அனைத்து ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்கம், தூத்துக்குடி மாவட்டம் சார்பாக காவலர் சுப்பிரமணியன் அவர்களின் வீர தீர செயலை போற்றும் வகையிலும், அவரது வீரமரணத்திற்கு இன்று 16வது நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் அனைவரும் காவலர் சுப்பிரமணியன் அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த அஞ்சலியின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வீரமரணமடைந்த காவலர் சுப்பிரமணியன் அவர்கள் குடும்பத்திற்கு உதவி செய்யும் பொருட்டு கடந்த 31.08.2020 தமிழக காவல்துறை சார்பாக ரூபாய் 86,50,000 /- நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. காவலர் சுப்பிரமணியன் மரணமடைந்திருந்தாலுமஅவர் குடும்பமும் காவல்துறையை சேர்ந்த குடும்பம்தான், அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொண்டு இருக்கிறோம்,மேலும் என்ன உதவிகள் கேட்டாலும் செய்ய தயாராக உள்ளோம்.இந்த ஓய்வு பெற்ற காவல்துறை சங்கத்தில் உள்ளவர்கள் குறைந்தது 30 முதல் 35 ஆண்டுகள் வரை பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் என்னை நேரடியாக தொடர்பு கொண்டு கேட்கலாம். அவரது குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அனைத்து ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்க தலைவர் ஒய்வு உதவி ஆய்வாளாகள் ஜெபமணி, துணை தலைவர் சேதுராஜ், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் பால்ராஜ், துணை செயலாளர் ஆறுமுக நயினார், நிர்வாக குழு தலைவர் ஓய்வு ஆய்வாளர் ராமசாமி, உறுப்பினர்கள் ஓய்வு உதவி ஆய்வாளர் ராமலிங்கம், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஓய்வு ஜாய் ஐசக் பாண்டி, காவல் ஆய்வாளர்கள் ஓய்வு வேல்சாமி, ஞானசெல்வம், உதவி ஆய்வாளர்கள்; ஓய்வு ஜெகவீரபாண்டியன், ஜெயப்பிரகாஷ், பொன்ராஜ், சந்திரன்,கசமுத்து, நடராஜன், தலைமை காவலர்கள் ஓய்வு சங்கர்ராஜ், சொக்கலிங்கம் மற்றும் மற்றொரு சொக்கலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

இதில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தூத்துக்குடி ஊரகம் பொறுப்பு பழனிக்குமார், சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன், காவல்துறை போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும்பெருமாள் உட்பட உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தற்போதைய செய்திகள்