78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு தமிழ்நாடு நெல்லை மக்களின் நம்பிக்கை நட்சத்திரங்கள்

நெல்லை மக்களின் நம்பிக்கை நட்சத்திரங்கள்

திருநெல்வேலி செப்டம்பர் -19

மனித நேயத்திற்கு மரியாதை செய்த திருநெல்வேலி மாநகர காவல்துறைவியப்பில் ஆழ்த்திய காவல் துணைஆணையரின் நடவடிக்கை

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 24 இவர் லேப்டாப் சர்வீஸ் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இரவு சுமார் பத்து முப்பது மணி அளவில் வேலையை முடித்துக்கொண்டு மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் வண்ணார்பேட்டை பகுதியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் சென்றபோது அங்கு சாலையோரம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் தன்னை ஏற்றிச் செல்லுமாறு கூறிக்கொண்டிருந்தார். இதனை காமெடிதான் மணிகண்டன் அந்த மூதாட்டியை அந்த மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு நெல்லை டவுனில் உள்ள அவரது வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

டவுன் பொருட்காட்சி அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு வாகன சோதனை ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் ஹெல்மெட் அணியாமல் சென்ற மணிகண்டன் வாகனத்தை நிறுத்தி அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

அப்போது மணிகண்டன். இரவு நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் தவித்த மூதாட்டிக்கு உதவி செய்வதற்காக சென்று கொண்டிருக்கிறேன் என போலீசாரிடம் கூறினார். எனினும் போலீசார் அவருக்கு அபராதம் விதித்ததால் மன உளைச்சலுக்கு உள்ளான மணிகண்டன் தனது சமூக வலைதள பக்கத்தில் உதவி செய்ய சென்ற எனக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து விட்டார்கள் என வேதனையுடன் பதிவு செய்திருந்தார்.

இதுகுறித்து அறிந்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் வயது முதிர்ந்த மூதாட்டி உதவி செய்யும் நோக்கில் சென்ற வாலிபர் மணிகண்டனுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய முடிவு செய்தார்.
துணை ஆணையர் சரவணன் ஆலோசனையின் பெயரில் இன்று காலை நெல்லை டவுன் காவல் உதவி ஆணையர் சதீஷ் தனது அலுவலகத்திற்கு வாலிபர் மணிகண்டனை நேரில் வரவழைத்து இனிமேல் வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் செல்லக்கூடாது எனக் கூறி அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்வதாக கூறினார்.

அபராத தொகை விதிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு உள்ளான வாலிபருக்கு மனிதநேயத்தை போற்றும் வகையில் நெல்லை மாநகர காவல்துறையின் நடவடிக்கை பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்