94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் சென்னை நூதனமாக ஏடிஎம் கார்டில் இருந்து திருடப்பட்ட ரூ. 49 ஆயிரம் பணத்தை திரும்ப...

நூதனமாக ஏடிஎம் கார்டில் இருந்து திருடப்பட்ட ரூ. 49 ஆயிரம் பணத்தை
திரும்ப மீட்டுக்கொடுத்த சைபர்கிரைம் போலீசார்

சென்னை, செப். 21–

செய்தியாளர் – H.M ரிஸ்வான்

ஏடிஎம் கார்டில் இருந்து ஆன்லைன் மோசடி நபர்களால் அபேஸ் செய்யப்பட்ட ரூ. 49 ஆயிரம் பணத்தை, சென்னை அம்பத்துார், வண்ணாரப்பேட்டை சைபர்கிரைம் போலீசார் மீட்டுக் கொடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்தவர் துருவி சன்யாசி ராவ் (51). இணையதளத்தில் தனியார் நிறுவனத்தின் சேவை மையம் குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது வாடிக்கையாளர் சேவை போல இணையத்தில் வந்த அறிவிப்பில் சன்யாசி ராவுக்கு உதவுவதாக கூறி Team viewer Quick support app என்ற இணைப்பு ஸ்கிரீனில் வந்துள்ளது. அதனை கிளிக் செய்து சன்யாசி ராவ் உள்ளே சென்றார். அப்போது அவரது ஆதார் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை அந்த இணைப்பில் உள்ளீடு செய்யுமாறு கேட்டுள்ளது. சன்யாசியும் அதனை உள்ளீடு செய்துள்ளார். சில நிமிடங்களில் துருவி சன்யாசிராவுக்கு அவரது சிட்டி பேங்க் கிரெடிட் காரிடிலிருந்து ரூ. 39,998 பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வங்கியில் போய் விசாரித்துள்ளார். அப்போது அது மோசடி ஆப் என தெரியவந்தது. இது தொடர்பாக அவர் அம்பத்தூர் காவல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

துணைக்கமிஷனர் தீபாசத்யன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் அது குறித்து விசாரணை நடத்தினர். இதில் சன்யாசிராவ் கூறியது உண்மை என தெரியவந்தது. அதனையடுத்து பணப்பரிவர்த்தனை நடந்த சிட்டி வங்கிக்கு, தொடர்பு கொண்ட சைபர்கிரைம் போலீசார் அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். சன்யாசிராவின் அனுமதியின்றி முறைகேடாக பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரது மோசடி செய்த பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் எனவும் சைபர்கிரைம் போலீசார் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதனையடுத்து சிட்டி வங்கி நிர்வாகம் புகார்தாரர் சன்யாசிராவவின் வங்கி கணக்கிற்கு, ரூ.19,999 பணத்தை திரும்பச்- செலுத்தினர். அதனையடுத்து சன்யாசிராவ் சைபர்கிரைம் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.

அதே போல சென்னையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு ஸ்டான்டர்டு சார்ட்டர்டு வங்கியின் கிரெடிட் கார்டிலிருந்து இந்திய மதிப்பில் ரூ.10,661 மதிப்புள்ள யூரோ டாலர்கள் எடுக்கப்பட்டதாக அவருக்கு குறுந்தகவல் வந்தது. அது தொடர்பாக செல்வராஜ் வண்ணாரப்பேட்டை துணைக்கமிஷனர் சுப்புலட்சுமியிடம் அது தொடர்பாக புகார் அளித்தார்.
வண்ணாரப்பேட்டை சைபர் குற்றப்பிரிவு போலீசார் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இதில் செல்வராஜின் கிரெடிட் கார்டிலிருந்து ஆஸ்திரேலியா, மெல்போர்னிலிருந்து பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. அது தொடர்பாக வண்ணாரப்பேட்டை சைபர் குற்றப்பிரிவு போலீசார் பணபரிவர்த்தனை நடந்த ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கிக்கு, தொடர்பு கொண்டு மோசடி தொடர்பாக தெரிவித்தனர். அதனை ஏற்ற வங்கி நிர்வாகம் செல்வராஜின் வங்கி கணக்கிற்கு, மோசடி செய்யப்பட்ட பணம் ரூ.10,661ஐ- செலுத்தினர். சென்னை நகரில் ஆன்லைன் மூலம் பணமோசடி செய்யும் புகார்கள் தொடர்பாக சைபர்கிரைம் போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்