82 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு மாவட்டம் சென்னை நன்னடத்தை உறுதியை மீறிய ரவுடிக்கு 354 நாட்கள் ஜெயில் மாதவரம் துணை கமிஷ்னர் அதிரடி உத்தரவு

நன்னடத்தை உறுதியை மீறிய ரவுடிக்கு 354 நாட்கள் ஜெயில் மாதவரம் துணை கமிஷ்னர் அதிரடி உத்தரவு

சென்னை, செப். 21–

செய்தியாளர் – H.M ரிஸ்வான்

சென்னை மாதவரத்தில் 1 வருட கால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறிய சரித்திரப் பதிவேடு குற்றவாளியை 354 நாட்கள் சிறையில் அடைத்து மாதவரம் துணைக்கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, எண்ணூர், சத்தியவாணி முத்து நகர், 10வது தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (26). பிரபல ரவுடி. எண்ணுார் காவல் நிலையத்தில் சரித்திரபதிவேடு குற்றவாளி லிஸ்டில் இவரது பெயர் உள்ளது. இவர் மீது ஒரு கொலை முயற்சி வழக்கு மற்றும் கஞ்சா தொடர்பான வழக்குகள் உள்ளது. தினேஷ்குமார் கடந்த மாதம் 29ம் தேதியன்று மாதவரம் துணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன் முன்பு தான் திருந்தி வாழப்போவதாக கூறி ஆஜாரானார். அதன்படி 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால், தினேஷ்குமார் கடந்த 6ம் தேதியன்று எண்ணுார் போலீஸ் நிலைய எல்லையில் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்டதின்பேரில் போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

1 வருட காலத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதிக் கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக செயல்முறை நடுவராகிய மாதவரம் துணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன் தினேஷ் குமாருக்கு 354 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். கு.வி.மு.ச. பிரிவு 107ன் கீழ் நன்னடத்தை பிணை ஆவணத்தில் எழுதிக் கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து, மீதமுள்ள 354 நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை தினேஷ்குமாருக்கு விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதன்பேரில் தினேஷ்குமார் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி ஆய்‌‌‌வு

0
தென்காசி - ஆகஸ்ட் -03,2021 தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்...

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

தற்போதைய செய்திகள்