86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது -...

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது – தனிப்படையினருக்கு மாவட்ட சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டு.

தூத்துக்குடி செப்டம்பர் -09

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 ½ கிலோ கஞ்சா கடத்தியவர் கைது – தனிப்படையினருக்கு மாவட்ட சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் அதிக கவனம் செலுத்தி மாவட்டம் முழுவதும் பல்வேறு தனிப்படைகள் அமைத்து தீவிரப்படுத்தியுள்ளார்.

இதன் விளைவாக கடந்த இரண்டு மாதங்களில் ஆங்காங்கே கஞ்சா, ‘சாரஸ்” மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும், அதற்குப் பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தும், பல குற்றவாளிகள் கைது செய்தும், பலர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் . அருள் தலைமையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் தூத்துக்குடி எட்டயாபுரம் ரோடு சுசி பெட்ரோல் பங்க் அருகில் சந்தேகப்படும்படியாக இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து, தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி ஐயப்பன் நகரைச் சோந்த சுப்பையா மகன் விஸ்வநாதன் (48) என்பதும், டிஎன் 7258 பதிவு எண் கொண்ட லாரியில் வெளி மாநிலத்திற்கு லோடு ஏற்ற சென்றபோது ஒடிசா மாநிலத்தில் அடையாளம் தெரியாத நபரிடம் கஞ்சா வாங்கி வந்ததாகவும், அதை தனது கூட்டாளியான தூத்துக்குடியில் உள்ள சரவணன் என்பவரிடம் மொத்தமாக விற்பனை செய்வதாகவும், அதை சரவணன் சில்லறை பொட்டலங்களாகபோட்டு விற்பனை செய்வதாகவும் தெரியவந்தது. உடனே தனிப்படையினர் மேற்படி விசுவநாதனை கைது செய்து, அவரிடமிருந்த 2 கிலோ 400 கிராம் கஞ்சாவையும், அவரது இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேற்படி அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார். மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு இதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் கைது செய்து, கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது -...

தற்போதைய செய்திகள்