85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மீன்பிடி துறைமுக பகுதியில் நடந்த கொலை வழக்கில் 3 பேர் கைது சம்பவம் நடந்த...

தூத்துக்குடி மீன்பிடி துறைமுக பகுதியில் நடந்த கொலை வழக்கில் 3 பேர் கைது சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் கைது எஸ்பி ஜெயக்குமார் அசத்தல்

தூத்துக்குடி செப்டம்பர் -14

தூத்துக்குடி மீன்பிடி துறைமுக பகுதியில் நடந்த கொலை வழக்கில் 3 பேர் கைது சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் கைது எஸ்பி ஜெயக்குமார் அசத்தல்

நேற்று (13.09.2020) இரவு 11.00 மணியளவில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து முத்தையாபுரம் பாரதி நகரில் வசிக்கும் ஜோசப் மகன் கபில் என்ற கபில்தேவ் (27) என்பவரை தூத்துக்குடி தாளமுத்துநகர், கோயில்பிள்ளை விளையைச் சேர்ந்த (1) இஸ்ரேவல் என்ற ராஜவேல் ( 29), தூத்துக்குடி பூபால்ராயபுரம் 3வது தெருவைச் சேர்ந்த செந்தில்குமரன் மகன் (2) அலெக்ஸ் என்ற விஜயபிரகாஷ் (23), தூத்துக்குடி மேல அலங்காரத்தட்டு, லைசால்நகர் நாகராஜ் மகன் (3) சாம் என்ற டேனியல் ராஜ் (21), தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த நண்டாள் என்ற முனீஸ், தூத்துக்குடி கோயில்பிள்ளை விளை தெருவைச் சேர்ந்த சித்திரை, தூத்துக்குடி திரேஸ்புரம் அருகில் உள்ள நேரு காலைனிலையச் சேர்ந்த முத்துகுமார் ஆகியோர் ஆளுக்கொரு கத்தியால் கபில் என்ற கபில்தேவ் என்பவரை சரமரியாக குத்தியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த கபில் என்ற கபில்தேவ் என்பவரை, அவரது நணபர்கள் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமைனைக்கு கொணடு சென்றனர், செல்லும் வழியில் கபில்தேவ் இறந்துள்ளார். இது சமபந்தமாக தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்ததை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு, தூத்துக்குடி டி.எஸ்.பி கணேஷ் மேற்பார்வையில் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையில் எஸ் ஐக்கள் சங்கர், காந்திமதி, செந்தில்குமார் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.

உத்தரவின்படி தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று மதியம் 02.00 மணியளவில் சின்னமணி நகர் பூங்கா அருகில் வைத்து மேற்படி தனிப்படையினர் (1) இஸ்ரேவல் என்ற ராஜவேல் ( 29) (2) அலெக்ஸ் என்ற விஜயபிரகாஷ் (23) மற்றும் (3) சாம் என்ற டேனியல் ராஜ் (21) ஆகிய 3 பேரையும் கைது செய்து தூத்துக்குடி குற்றவியில் நிதித்துறை நடுவர் முன்பு ஆஜர் படுத்தி நிதிமன்ற உத்தரவுப்படி கோவில்பட்டி மாவட்ட கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தூத்துக்குடி தெற்கு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்