78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் ஒருவர் கொலை. சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்...

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் ஒருவர் கொலை. சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை.

தூத்துக்குடி செப்டம்பர் -14

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம், பாரதி நகர் பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரது மகன் கபில் (எ) கபில்தேவ் (27). இவருடைய நண்பர்களான சாம்சன் இம்மானுவேல் மற்றும் திரேஸ்புரத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் முகுந்தன் ஆகியோர் நேற்று இரவு புது ஆடைகள் வாங்க தூத்துக்குடி பள்ளிவாசல் பகுதியில் உள்ள துணிக்கடைக்கு சென்றுள்ளனர். அங்கு வந்த தாளமுத்துநகரை சேர்ந்த செல்வராஜ் என்பரது மகன் ராஜவேல் (எ) இஸ்ரவேல் என்பவருக்கும், சாம்சன் இம்மானுவேல் மற்றும் முகுந்தன் ஆகியோர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சாம்சன் இம்மானுவேல் தனது நண்பர் கபில்தேவ்விடம் கூறியுள்ளார். இதனையடுத்து கபில்தேவ், சாம்சன் இம்மானுவேலை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்;டு ராஜவேலை காண தூத்துக்குடி மீன்பிடி துறைமுக பகுதிக்கு சென்றுள்ளார்.அங்கு இருந்த ராஜவேலிடம் இதுகுறித்து சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜவேல் தான் வைத்திருந்த கத்தியால் கபில்தேவை குத்தி கொலை செய்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த தென்பாக காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ்; மேற்பார்வையில் தென்பாக காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து, கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்