86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக கொரோன வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு...

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக கொரோன வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நடவடிக்கையாக திருநங்கைகள் மற்றும் ஏழைய எளிய மக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் மற்றும் அரிசிப்பை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமயில் நடைபெற்றது

தூத்துக்குடி செப்டம்பர் -06


தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி கபசுரக்குடிநீர், முகக்கவசம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி காவல்துறை சார்பாக குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு திருநங்கைகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு கபசுரக்குடிநீர், முகக்கவசம் மற்றும் அரிசிப்பைகள் வழங்கினார்.*

இந்நிகழ்ச்சியில் எஸ்பி ஜெயக்குமார் பேசுகையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. நாளை முதல் ரயில்கள் மற்றும் பேரூந்துகள் இயக்கப்படுவது உட்பட அரசு பல்வேறு தளர்வுகள் அளித்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி சுத்தம் செய்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்

திருநங்கைகள் பிழைப்புக்கு வழியில்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது திருநங்கைகளிடம், உங்கள் அனைவரின் கல்வித்தகுதி மற்றும் இதர விபரங்களை தமது அலுவலகத்தில் நாளை தெரிவிக்குமாறும், கல்வித்தகுதி எதுவும் இல்லாதவர்களும் தங்கள் விபரங்களை தெரிவிக்கலாம் எனவும், அவரவர்களுக்கு தகுந்தாற்போல் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதற்கான ஏற்பாடுகள் செய்யபடும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.*

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர்கள் ராஜாமணி, காமராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.கணேஷ், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர்கள் ராஜாமணி, காமராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தற்போதைய செய்திகள்