81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்தோப்பு கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்ட மூன்றாவது கண் எனப்படும்...

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்தோப்பு கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்ட மூன்றாவது கண் எனப்படும் சி.சி.டி.வி கேமராவை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி செப்டம்பர் -12

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்தோப்பு கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்ட மூன்றாவது கண் எனப்படும் சி.சி.டி.வி கேமராவை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகில் ஆழ்வார்தோப்பில் உள்ள முக்கிய தெருக்களில் புதியதாக அமைக்கப்பட்ட மூன்றாவது கண் எனப்படும் சி.சி.டி.வி கேமராக்கள் 35 முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழா ஆழ்வார்தோப்பு சந்திரா மஹாலில் நடைபெற்றது. இதில் சிசிடிவி கேமரா இயக்கத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் குற்றங்களை குறைப்பதற்கு சி.சி.டி.வி கேமரா என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இங்கு 35 கேமராக்கள் முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் பொருத்துவதன் மூலம் இரண்டு நன்மைகள், ஒன்று குற்றம் நடக்காமல் தடுப்பது, மற்றொன்று நடந்த குற்றத்தை கண்டு பிடிப்பது. இந்த கேமரா பொருத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த சி.சி.டி.வி கேமரா மூலம் பெரும்பாலான குற்றங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது என்றும், சி.சி.டி.வி கேமரா பொருத்துவதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். மேலும் இளைஞர்கள் புகையிலை மற்றும் கஞ்சா போன்றை போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகக்கூடாது, இளைஞர்கள் நல்வழியை பின்பற்ற வேண்டும் என்றும், காவல்துறை உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும், சி.சி.டி.வி கேமரா பொருத்துவதற்கு உறுதுணையாக இருந்த ஊர்; மக்களுக்கும், இளைஞர்களுக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நன்றி கூறி, தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த விழாவில் தூத்துக்குடி மாவட்ட திட்ட இயக்குனர் தனபதி, விழாவில் ஆழ்வார்தோப்பு பஞ்சாயத்து தலைவர் அமுதாஅருள்ராஜ், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சந்திரன், காவல் ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன், ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்