76 F
Tirunelveli
Sunday, December 5, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் பேயன்விளையில் 35 சவரன் கொள்ளை எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு டிஎஸ்பி...

தூத்துக்குடி மாவட்டம் பேயன்விளையில் 35 சவரன் கொள்ளை எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு டிஎஸ்பி பாரத் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்

தூத்துக்குடி செப்டம்பர் -07

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேயன்விளை ஏ.ஐ.டி.யூ.சி காலணியில் சுதர்சன் செல்வபாபு என்பவர் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இவர் குவைத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சுதர்சன் செல்வபாபு மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மேற்படி பேயன்விளையில் உள்ள அவர்களது வீட்டை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் மாலை காயல்பட்டினம் கோமன்புதூரில் உள்ள அவரது உறவினர் இறந்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.

நேற்று இரவு சுதர்சன் செல்வபாபு அவரது மனைவிக்கு போன் செய்து, பேயன்விளையில் உள்ள அவர்களது வீட்டில் உள்ள கேமரா ஆஃப் காட்டுகிறது, அதை என்னவென்று பார்க்கச் சொன்னதால், சுதர்சன் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் காலை பேயன்விளையில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கேமராவை திருப்பி, கேமரா வயரை அறுத்து, வீட்டு பீரோவிலிருந்த 35 ¾ பவுன் நகையை திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து சுதர்சன் செல்வபாபு ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேயன்விளையில் உள்ள சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து, திருச்செந்தூர் டி எஸ்பி பாரத் மேற்பார்வையில் ஆறுமுகநேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் செல்வி, உதவி ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

19,724FansLike
55FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ரவுடிகளின்‌‌‌ செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட எஸ்பி தனிப்படை அமைப்பு

0
திண்டுக்கல் - டிச - 04,2021 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்கவும் அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் சிறப்பு தனிப்படைகள் - திண்டுக்கல் மாவட்ட காவல்...

மகளுக்‌‌‌கு பாலியல் தொந்‌‌‌தரவு – தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ் எஸ்பி அதிரடி...

0
அரியலூர் - டிச -04,2021 காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை: சிறுமியிடம் பாலியல் சீண்டல்கள் செய்த தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் தந்தையே தனது மகளை தொடர்ந்து பாலியல் சீண்டல்கள்...

கல்லூரி மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

0
திருவாரூர் - டிச -04,2021 விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌவுரவிப்பு மன்னார்குடி நகர...

சிசிடிவி கேமரா கண்காணிப்பு நகரமாக மாறிவரும் சேலம் – போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
சேலம் - டிச - 04,2021 சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய சரகத்தில் உள்ள ரெட்டிப்பட்டி, மாமாங்கம், குரங்குசாவடி, சங்கர் தியேட்டர், ஸ்டேட் பாங்க் காலணி, ஸ்வர்ணபுரி அனெக்ஸ், இந்திரா நகர், நகர்மலை...

காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில்‌‌‌ நடைபெற்றது

0
திருப்பத்தூர் - டிச - 03,2021 மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப காவல் பணியில் தரத்தினை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான இடைவெளியை போக்கவும் பணியின் தரத்தினை அளவிடுவது இன்றியமையாததாகும். திருப்பத்தூர் மாவட்ட காவல்...

தற்போதைய செய்திகள்