84.7 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம், தென்பாக காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்றாவது கண் எனப்படும்...

தூத்துக்குடி மாவட்டம், தென்பாக காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்றாவது கண் எனப்படும் சி.சி.டி.வி கேமராவை மாவட்ட சூப்பிரன்டு ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

தூத்துக்குடி செப் -23

தூத்துக்குடி, தென்பாக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 16 சி.சி.டி.வி கேமராக்களை தென்பாகம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.மேலும் புதிதாக துவக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி நுழைவுவாயில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, இராஜாஜி பூங்கா நுழைவுவாயில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பேருந்து நிறுத்தம், மாவட்ட நீதிமன்ற நுழைவுவாயில், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் முன்புறம் ஆகிய 6 இடங்களில், 16 சி.சி.டி.வி கேமராக்கள் ஒலிபெருக்கி வசதியுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிசிடிவி கேமராக்களை தென்பாகம் காவல் நிலையத்தில் மின்திரை மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், குற்றங்களை குறைப்பதற்கு சி.சி.டி.வி கேமரா என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இந்த கேமரா பொருத்துவதன் மூலம் இரண்டு நன்மைகள். ஓன்று குற்றங்கள் நடக்காமல் தடுப்பது, மற்றொன்று நடந்த குற்றத்தை கண்டுபிடிப்பது. சி.சி.டி.வி கேமராவின் மூலமே உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கமுடியும். சென்னையில் அனைத்து இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் குற்றங்கள் 50 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது பெண்களுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை. சி.சி.டி.வி கேமரா பொருத்தபடுவதின் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் சி.சி.டி.வி பொருத்த காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்தோப்பு, கழுகுமலை ஆகிய ஊர்களில் சி.சி.டி.வி கேமரா பொருத்துப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் சி.சி.டி.வி கேமரா பொருத்த காவல்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேசினார்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், காவல்துறை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், தென்பாகம் உதவி ஆய்வாளர் சங்கர், செந்தில்குமார், போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

போலி உதவி கமிஷனர் கைது – மாவட்ட எஸ்.பியின் ஸ்கெட்ச்

0
திண்டுக்கல் - ஆகஸ்ட் -03,2021 முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேரள முதல்வர் பிரணாப் விஜயன் தமிழகத்தை தவிர்த்து மற்றும் பல மாநில முதல்வர்களுடன் சந்தித்து போட்டோ எடுத்து அதை முகநூலில் பதிவு...

தற்போதைய செய்திகள்