94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் அருகே சில்வர்புரம் பகுதியில் இன்று காலை ஒருவர் கொலை - 6...

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் அருகே சில்வர்புரம் பகுதியில் இன்று காலை ஒருவர் கொலை – 6 மணி நேரத்தில் கொலை வழக்கு குறறவாளிகள் இருவரை கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டு.

தூத்துக்குடி செப் -22

தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சில்வர்புரம் பகுதியைச் சேர்ந்தவர்களான ரங்கநாதன் மகன் நந்தகுமார்(42) மற்றும் வேதமுத்துராஜ் மகன் ஜார்ஜ் (45) ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள பர்னிச்சர் கம்பெனியில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் தொழில் சம்மபந்தமாக இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜார்ஜை வேலையை விட்டு நீக்கி விட்டார்கள். இதன் காரணமாக ஜார்ஜ்க்கும், நந்தகுமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் விடியற்காலை சில்வர்புரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நந்தகுமாரை வழிமறித்த ஜார்ஜ் அவரை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளார். இது குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துசுப்பிரமணியன் தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர்கள் சக்தி மாரிமுத்து, டேவிட் ராஜன் மற்றும் அய்யப்பன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.அதன் அடிப்படையில் தனிப்படையினர் 6 மணி நேரத்தில் வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான ஜார்ஜ் மற்றும் ஜார்ஜ்க்கு உதவியாக இருந்த அவரது நண்பரான விளாத்திகுளம் வேடப்பட்டி காமாட்சி நகரைச் சேர்ந்த காளிமுத்து மகன் இளையராஜா (39) ஆகிய இருவரையும் மடத்தூர் ரயில்வே பாலம் அருகில் கைது செய்தனர். மேற்படி எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்