81.5 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் அருகே சில்வர்புரம் பகுதியில் இன்று காலை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் சம்பவ...

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் அருகே சில்வர்புரம் பகுதியில் இன்று காலை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் சம்பவ இடத்திற்கு மாவட்ட சூப்பிரன்டு ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை.

தூத்துக்குடி செப் -22

தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சில்வர்புரம் பகுதியைச் சேர்ந்தவர்களான ரங்கநாதன் மகன் நந்தகுமார்(42) மற்றும் வேதமுத்துராஜ் மகன் ஜார்ஜ் (45) ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள பர்னிச்சர் கம்பெனியில் ஒன்றாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தொழில் சம்மபந்தமாக இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜார்ஜை வேலையை விட்டு நீக்கி விட்டார்கள். இதன் காரணமாக ஜார்ஜ்க்கும், நந்தகுமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று விடியற்காலை சில்வர்புரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நந்தகுமாரை வழிமறித்த ஜார்ஜ் அவரை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தூத்துக்குடி ஊரக டிஎஸ்பி பொன்னரசு மேற்பார்வையில், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை விரைந்து கண்டுபிடித்து, கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்