78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகில் உள்ள சம்படி கிராமத்தைச் சேர்ந்த பெண் கொலை வழக்கில் தேடபட்டு...

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகில் உள்ள சம்படி கிராமத்தைச் சேர்ந்த பெண் கொலை வழக்கில் தேடபட்டு வந்த குற்றவாளிகள் 2 பேர்
கைது எஸ்பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி செப்டம்பர் -14

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகில் உள்ள சம்படி கிராமத்தைச் சேர்ந்த பெண் கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேர் கைது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்படி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி செங்கமலம் (47).இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு 2 பெண்குழந்தைகளும், ஒரு ஆண்குழந்தையும் உள்ளனர். இவர் தனது ஆண் குழந்தையுடன் சம்படியில் உள்ள வீட்டில் குடியிருந்து வருகிறார். இவர் சற்று மனநிலை சரியில்லாதவர். இந்நிலையில் இவர் 12.09.2020 காலை சம்படியில் உள்ள காட்டுப்பகுதியில் சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சம்படி பகுதியை சேர்ந்த கணபதி மகன் ஆனந்த் (34) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மூக்காண்டி மகன் மகாராஜா என்ற சந்தன மகாராஜா (24) ஆகிய இருவரும் சேர்ந்து செங்கமலத்தை தவறான நோக்கத்தோடு 10.09.2020 அன்று சற்று மனநிலை பாதிக்கப்பட்ட செங்கமலம் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து, அவரை பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயன்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செங்கமலத்தை ஆனந்த் செங்கலால் தலை முகம் மற்றும் நெற்றியில் தாக்கியுள்ளார். மேலும் தங்களை காட்டி கொடுத்துவிடுவார் என இருவரும் பயந்து செங்கமலத்தை கொலை செய்து, அவரை தூக்கிக் கொண்டு வீட்டின் பின்புறம் உள்ள புதர் பகுதியில் வீசி விட்டு சென்றுவிட்டனர். மேலும் இவர்கள் இருவரும் செங்கமலத்தை யாரும் தேடுகிறார்களா என்று பார்த்துள்ளனர். அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தெரிந்தவுடன் மகாராஜா அன்று இரவே சென்னை சென்றுள்ளார். ஆனந்த் சம்படியிலேயே இருந்துள்ளார். மீண்டும் மகாராஜா 12.09.2020 அன்று சென்னையிலிருந்து சம்படிக்கு வந்துள்ளார். இந்நிலையில் கொலை நடந்த செங்கமலத்தின் வீடு மற்றும் அவர் சடலமாக கிடந்த புதர் ஆகியவற்றில் கிடந்த சட்டைகள் மற்றும் சில பொருட்களை கொண்டு எதிரிகளை அடையாளம் கண்டு தனிப்படையினர் கைது செய்தனர்.

எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்டட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்