76 F
Tirunelveli
Sunday, December 5, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சம்படி பகுதியில் பெண் சடலமாக மீட்பு - சம்பவ...

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சம்படி பகுதியில் பெண் சடலமாக மீட்பு – சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு

தூத்துக்குடி செப்டம்பர் -12

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்படி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி செங்கமலம் (47). இவருக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தைக்கு 11 வயது, மற்றொரு பெண் குழந்தைக்கு 8 வயது மற்றும் 4 வயதில் 1 ஆண் குழந்தையும் உள்ளனர். இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவரது ஆண் குழந்தையுடன் சம்படியில் உள்ள வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் இவர்காலை சம்படியில் உள்ள காட்டுப்பகுதியில் சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த ஏரல் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தடயவியல் நிபுணர் கலா லெட்சுமி மற்றும் கைரேகை பிரிவு உதவி ஆய்வாளர் . வைஜெயந்தி மாலா மற்றும் மோப்பநாய் படை பிரிவினர் சம்பவ இடத்திலுள்ள கைரேகை மற்றும் தடயங்கள் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். இறந்த செங்கமலம் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள், ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலெட்சுமி, உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை குற்றவாளிகளை விரைந்து பிடிக்க அமைக்கபட்டுள்ளது

19,724FansLike
55FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ரவுடிகளின்‌‌‌ செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட எஸ்பி தனிப்படை அமைப்பு

0
திண்டுக்கல் - டிச - 04,2021 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்கவும் அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் சிறப்பு தனிப்படைகள் - திண்டுக்கல் மாவட்ட காவல்...

மகளுக்‌‌‌கு பாலியல் தொந்‌‌‌தரவு – தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ் எஸ்பி அதிரடி...

0
அரியலூர் - டிச -04,2021 காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை: சிறுமியிடம் பாலியல் சீண்டல்கள் செய்த தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் தந்தையே தனது மகளை தொடர்ந்து பாலியல் சீண்டல்கள்...

கல்லூரி மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

0
திருவாரூர் - டிச -04,2021 விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌவுரவிப்பு மன்னார்குடி நகர...

சிசிடிவி கேமரா கண்காணிப்பு நகரமாக மாறிவரும் சேலம் – போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
சேலம் - டிச - 04,2021 சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய சரகத்தில் உள்ள ரெட்டிப்பட்டி, மாமாங்கம், குரங்குசாவடி, சங்கர் தியேட்டர், ஸ்டேட் பாங்க் காலணி, ஸ்வர்ணபுரி அனெக்ஸ், இந்திரா நகர், நகர்மலை...

காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில்‌‌‌ நடைபெற்றது

0
திருப்பத்தூர் - டிச - 03,2021 மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப காவல் பணியில் தரத்தினை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான இடைவெளியை போக்கவும் பணியின் தரத்தினை அளவிடுவது இன்றியமையாததாகும். திருப்பத்தூர் மாவட்ட காவல்...

தற்போதைய செய்திகள்