91 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் உலகப்புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு இன்று கோவில்...

தூத்துக்குடி மாவட்டம் உலகப்புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு இன்று கோவில் வளாக மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி செப்டம்பர் – 20

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு இன்று கோவில் வளாக மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் வருகின்ற 17.10.2020 முதல் 26.10.2020 ஆகிய பத்து நாட்கள் நடைபெற இருக்கும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் எஸ்.எஸ்.எஸ். திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும்போது இந்த தசரா திருவிழாவை சிறப்பாக அதே சமயம் கூட்டம் இல்லாத, கொரோனா பாதிப்பில்லாத திருவிழாவை எப்படி கொண்டாட வேண்டும் என்பது நமது நோக்கமாக இருக்க வேண்டும்.இது ஒரு முதற்கட்ட கூட்டம்தான், வரும் வாரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும், அக்கூட்டத்தில திருவிழா தொடர்பாக என்னென்ன நடைமுறைகள் கடைபிடிக்க வேண்டும் என்ற நெறிமுறைகள் இருக்கும், அதன் பேரில் காவல்துறை செயல்படும். இன்று இக்கூட்டத்தில் நீங்கள் கூறிய கருத்துக்கள் மாவட்ட ஆட்சியர் கலந்தாய்வு கூட்டத்தில் எடுத்துரைத்து இந்த திருவிழாவை மிகச் சிறப்பாக உங்கள் ஒத்துழைப்புடன் செய்ய முடியும் என்று கூறி தனது உரையை முடித்தார்.

இக்கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கணேசன், இந்து மகா சபை மாநில செயலாளர் திரு. அய்யப்பன், சிவசேனா கட்சி மாநில அமைப்பாளர் சசிகுமார், குலசை ஊராட்சி மன்ற தலைவர்சொர்ணபிரியா, துணைத் தலைவர் கணேசன், சிவலூர் தசரா குழு தலைவர் முருகேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பாரத், குலசேகரப்பட்டடினம் காவல் நிலைய ஆய்வாளர் ராதிகா, உதவி ஆய்வாளர்கள் அமலோற்பவம், முனியாண்டி உள்ளிட்ட காவல் துறையினர் உடனிருந்தனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்