84.7 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 20 காவல்துறையினருக்கு மாவட்ட...

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 20 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

செப்டம்பர் –2

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 20 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

கடந்த 25.08.2020 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்வாய் பகுதியில் புளியங்குளத்தை சேர்ந்த செல்லையா மகன் முருகன் (31) என்பவரை வழிமறித்து அரிவாளால் தாக்க முயன்ற எதிரிகள் 4 பேரை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்வதற்கு உதவியாக இருந்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் . ஜோசப் ஜெட்சன், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் இன்னோஸ் குமார், செய்துங்கநல்லூர் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலர் பூர்ணராஜ், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய தனிப்பிரிவு முதல்நிலைக் காவலர் சுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய காவலர்கள் செந்தில் முருகன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

கடந்த 25.08.2020 அன்று விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்த்தாண்டம்பட்டியில் உள்ள வைப்பார் ஆற்றுப்படுகையில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய 2 டிப்பர் லாரிகள், 1 ஜேசிபி இயந்திரம், 2 இருசக்கர வாகனம் மற்றும் சம்பந்தப்பட்ட 6 எதிரிகளையும் கைது செய்த விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காசிலிங்கம், விளாத்திகுளம் உட்கோட்ட உதவி ஆய்வாளர் சேகர், விளாத்திகுளம் காவல் நிலைய தலைமைக் காவலர் மாடசாமி, முதல் நிலை காவலர்கள் ஜெயச்சந்திரன், சிவசங்கர், காவலர்கள் ராமசாமி, முத்துக்காமாட்சி, டேவிட் ராஜ் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

கடந்த 29.08.2020 அன்று ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட தனிப்படையினர் ரோந்து வந்த போது பேட்மாநகரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி ரவுடித்தனம் செய்து வந்த பல கொலை, கொலை முயற்சி, திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஸ்ரீவைகுண்டம் சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த தங்கையா மகன் முருகன் என்பவரை கைது செய்த ஏரல் போலீஸ்டேஷன் எஸ் ஐ முருகப் பெருமாள், தலைமைக் காவலர் குணசேகரன், குரும்பூர் காவல் நிலைய தலைமை காவலர் வெங்கடாச்சலபெருமாள், செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் வேம்புராஜ், ஏரல் காவல் நிலைய காவலர் நாராயணசாமி, ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் இளங்கோ ஆகியோரின் சிறப்பான பணிக்காக

காவல் ஆய்வாளர் உட்பட 20 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்று வழங்கி பாராட்டினார்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

போலி உதவி கமிஷனர் கைது – மாவட்ட எஸ்.பியின் ஸ்கெட்ச்

0
திண்டுக்கல் - ஆகஸ்ட் -03,2021 முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேரள முதல்வர் பிரணாப் விஜயன் தமிழகத்தை தவிர்த்து மற்றும் பல மாநில முதல்வர்களுடன் சந்தித்து போட்டோ எடுத்து அதை முகநூலில் பதிவு...

தற்போதைய செய்திகள்