94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் திருட்டு சம்பந்தமாக 120 பேர் கைது எஸ்.பி ஜெயக்குமார் அதிரடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் திருட்டு சம்பந்தமாக 120 பேர் கைது எஸ்.பி ஜெயக்குமார் அதிரடி

செப்டம்பர் -2

தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் திருட்டை தடுப்பதற்கு காவல்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து காவல் நிலைய காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கப்பட்டு, தீவிர ரோந்துப்பணிகள் நடைபெற்று வருகிறது. இது தவிர தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு 78 மணல் திருட்டு வழக்குகள் பதிவு செய்து, 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் – இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். மணல் திருட்டை தடுக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 5 தனிப்படைகள் – மணல் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை.

இந்த ஆண்டு 78 மணல் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் திருடுவதற்கு பயன்படுத்திய டிராக்டர் 24, லாரி 12, டிப்பர் 28, ஜே.சி.பி இயந்திர வாகனங்கள் 11, மாட்டுவண்டி 8 மற்றும் மற்ற வாகனங்கள் 24 ஆக மொத்தம் 107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும், அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என்றும், மணல் கடத்தலுக்கு காவல்துறையினர் யாராவது உடந்தையாக இருந்தால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

மணல் கடத்தல் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிந்தால் காவல்துறை அவசர தொலை பேசி எண் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ‘ஹலோ போலீஸ்” 95141 44100 என்ற எண்ணிற்கு நேரடியாகவோ அல்லது வாட்ஸ் ஆப் மற்றும் குறுஞ்செய்தி போன்றவற்றின் மூலமாகவோ தகவல் அளிக்கலாம். மேலும் தகவல் தருபவர்கள், தங்கள் பெயர்களை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை, பெயர்கள் கொடுத்தாலும் அவர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்