81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினருக்கு வழக்கு நாட்குறிப்பை திறம்பட எழுதுவது குறித்த 5 நாள் பயிற்சி வகுப்பை...

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினருக்கு வழக்கு நாட்குறிப்பை திறம்பட எழுதுவது குறித்த 5 நாள் பயிற்சி வகுப்பை மாவட்ட காவல் அலுவலக வளாக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி செப் – 29

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினருக்கு வழக்கு நாட்குறிப்பை திறம்பட எழுதுவது குறித்த 5 நாள் புத்தாக்க பயிற்சி வகுப்பை மாவட்ட காவல் அலுவலக வளாக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு தங்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் வழக்கு நாட்குறிப்பு எவ்வாறு திறம்பட எழுத வேண்டும் என்றும், வழக்கு நாட்குறிப்பில் எழுதப்படும் வழக்குகளின் விபரங்களின் மூலம் எதிரிக்கு தண்டனை பெறும் வகையில் எவ்வாறு வழக்கு நாட்குறிப்பை கையாள வேண்டும் என்பவை பற்றிய 5 நாள் புத்தாக்க பயிற்சி வகுப்பை தூத்துக்குடி மாட்ட காவல் அலுவலக வளாக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்த புத்தாக்கப்பயிற்சி வகுப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு உட்பட 58 காவல் நிலையங்களிலிருந்து, காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை ஒரு காவல் நிலையத்திற்கு 6 பேர் வீதம் மொத்தம் 348 பேருக்கு 6 பிரிவுளாக தலா ஒவ்வொரு பிரிவிற்கும் 5 நாட்கள் பயிற்சிளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 58 காவல் நிலையங்களிலிருந்து ஒரு காவல் நிலையத்திற்கு ஒருவர் வீதம் 58 பேருக்கு முதற்கட்ட பிரிவு பயிற்சி இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த புத்தாக்க பயிற்சி வகுப்பு தூத்துக்குடி மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பி இளங்கோவன் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பகம் ஆய்வாளர் ஜெரால்டுவின் மற்றும் தெர்மல் நகர் காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா ஆகியோர் பயிற்சியளித்து வருகின்றனர்.

இந்த புத்தாக்க பயிற்சி வகுப்பில் காவல்துறையினருக்கு வழக்கு நாட்குறிப்பை சிறந்த முறையில் எவ்வாறு எழுத வேண்டும் என்பது பற்றி அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் பழனிச்சாமி சிறப்பு விரிவுரையாளராக கலந்து கொண்டு பயிற்சியளித்தார்.

Previous articleகொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிர் நீத்த நீலாங்கரை போக்குவரத்து காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் திருவுருவ படத்திற்கு டிஜிபி திரிபாதி சென்னை போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் மற்றும் உயரதிகாரிகள் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
Next articleதூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதிவிகளுக்கான 2020ம் ஆண்டிற்கான பொதுத்தேர்வுக்கு இணைய வழி மூலம் விண்ணப்பம் செய்வதற்கான உதவி மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் இன்று துவக்கி வைத்தார்.
19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தற்போதைய செய்திகள்