81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 21 காவல்துறையினருக்கு மாவட்ட...

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 21 காவல்துறையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி செப் -28

கடந்த 01 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட, திரேஸ்புரம் பகுதியில் மர்மமான முறையில் தலையில் இரத்த கறையுடன் இறந்து கிடந்த காளிமுத்து என்பவரின் இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து நிலுவையில் இருந்து வந்த நிலையில், காளிமுத்து அடித்து கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்து, சம்மந்தப்பட்ட எதிரிகளை அடையாளம் கண்டு கைது செய்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அருள், உதவி ஆய்வாளர் ரவிக்குமார், தனிப்பிபரிவு தலைமைக் காவலர் பூலையா நாகராஜன், தலைமைக் காவலர் பிச்சையா, முதல் நிலைக் காவலர் மாணிக்கராஜ், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் சின்னத்துரை, தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய காவலர் மகாலிங்கம் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

கடந்த 26 சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ஏபிசி மகாலெட்சுமி கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகில் அதிக மதிப்பு வாய்ந்த இரிடியம் வைத்திருந்ததாக, காரைக்குடியை சேர்ந்த வைத்தியலிங்கம், முதுகுளத்தூரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மற்றும் இரு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன், உதவி ஆய்வாளர் சங்கர், தூத்துக்குடி ஊரக தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜன், தெர்மல் காவல் நிலைய முதல் நிலை காவலர் ராஜாமணி, சிப்காட் காவல் நிலைய முதல் நிலை காவலர் கலைவாணர் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

கடந்த 24 அன்று சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்டப்பட்ட, சாயர்புரம் பஜாரில் உள்ள டெய்லர் கடை அருகில் திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரைச் சேர்ந்த 5 ரவுடிகள் அங்குள்ள கடைகளில் பணம் கேட்டு பிரச்சினை செய்துள்ளனர். அப்போது அங்கு பணியிலிருந்த காவலர்களையும் ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றவர்களை கைது செய்த சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள், ஏரல் காவல் நிலைய தலைமைக் காவலர் குணசேகரன், குரும்பூர் காவல் நிலைய தலைமைக் காவலர் வெங்கடாசலபெருமாள், செய்துங்கநல்லூர் காவலர் நிலைய முதல் நிலைக் காவலர்கள் வேம்புராஜ் மற்றும் ஆனந்தராஜ், சேரகுளம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் முத்துக்குமார், ஏரல் காவல் நிலைய காவலர் நாராயணசாமி, ஆழ்வார்திருநகரி காவல் நிலைய காவலர் இளங்கோ, சேரகுளம் காவல் நிலைய காவலர் ஜெயபிரகாஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

காவல் ஆய்வாளர்கள் உட்பட 21 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உடனிருந்தார்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்