82 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையார் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு...

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையார் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீண்;குமார் அபிநபு மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி செப் -25

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையார் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீண்;குமார் அபிநபு மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மன்புரத்தில் உள்ள வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் நாளை நடைபெற உள்ள 17ம் ஆண்டு நினைவு முன்னிட்டு திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீண்குமார் அபிநபு மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 3 ஏடிஎஸ்பி , 15 டிஎஸ்பிக்கள் , 48 இன்ஸ்பெக்டர்கள் 94 எஸ் ஐ க்கள் உட்பட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது தவிர மாவட்ட எல்லைகளில் 15 சோதனை சாவடிகளும், மாவட்டத்திற்குள் 13 சோதனை சாவடிகளும் அமைத்து திவீரமாக கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துணை துணை தலைவர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இன்று மாலை ஆறுமுகநேரி, அன்னை எஸ்.பி மஹாலில் பாதுகாப்பு குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்;கை நடவடிக்கையாக செப்டம்பர் மாதம் முழுவதும் 144 தடைஉத்தரவு அமலில் உள்ளதால் ஊர்வலத்திற்கோ, அன்னதானத்திற்கோ எவ்வித அனுமதியும் இல்லை எனவும், ஜாதி ரீதியாக சட்டை அணியவோ, பிற ஜாதியினரை புண்படும்படி வாசகங்களை பயன்படுத்தி கோஷம் எழுப்பக்கூடாது எனவும், நீதிமன்ற உத்தரவின்படி‌ டிஜிட்டல் பேனர்கள் எதுவும் வைக்க அனுமதியில்லை எனவும், மேலும் வெங்கடேஷ் பண்ணையார் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் அவரது நினைவிடத்திற்கு செல்வதற்கு அனுமதி கிடையாது எனவும் மாவட்ட சூப்பிரண்டு ஜெயக்குமார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்

இக்கூட்டத்தில் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோருடன் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் கோபி, செல்வன், திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ் சிங், பயிற்சி ஏஎஸ்பி அபிஷேக் குப்தா, உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி ஆய்‌‌‌வு

0
தென்காசி - ஆகஸ்ட் -03,2021 தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்...

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

தற்போதைய செய்திகள்