80.5 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய...

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் 30 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

தூத்துக்குடி செப்டம்பர் -16

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் 30 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் பழக்கூடை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை எதிர்கொண்டு பொதுமக்களை காப்பதில் சிறப்பாக பணியாற்றி காவல்துறையின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் . அனிதா, குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் . தேவராஜ், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய பெண் தலைமை காவலர் . பியூலா செல்வகுமாரி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் பாலசுப்ரமணியன், சாத்தான்குளம் காவல் நிலைய தலைமைக் காவலர் ஐசக் மகாராஜா, புதியம்புத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் . பாபு, புதுக்கோட்டை காவல் நிலைய பெண் தலைமை காவலர் . ஜெயராணி, கயத்தார் காவல் நிலைய முதல் நிலை காவலர் மாரியம்மாள், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் முதல்நிலைக் காவலர் தமிழ்ச்செல்வி, நாசரேத் காவல் நிலைய முதல் நிலை காவலர். சக்தி முத்து, மாவட்ட குற்றப்பிரிவு முதல் நிலை காவலர் காசிவிஸ்வநாதன், தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய காவலர் சரவணகுமார், ஆத்தூர் காவல் நிலைய காவலர் திரு. கார்த்திக் சங்கர், சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் சக்திவேல், தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய காவலர் சந்தோஷ் ராஜ், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய காவலர் இசக்கியப்பன், தட்டார்மடம் காவல் நிலைய காவலர் சுதன், தூத்துக்குடி ஆயுதப்படை தலைமை காவலர் பெருமாள், காவலர்கள் திரு. சஞ்சீவி, . பெரிய மாயன், வேல்முருகன்,. முத்துதமிழரசன், விக்னேஷ், ஜெபஸ்டின் லெனின், சதிஷ், . எர்ணவேல் ராஜா, சந்தியா, தீபா ஆகியோர் களப்பணியாற்றும் போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.

மேற்படி 30 காவல்துறையினருக்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் பழக்கூடை வழங்கி ‘கொரோனா தொற்று நோய் மக்களுக்கு பரவாமல் தடுக்க தைரியமாக தாங்கள் முன்வரிசையில் நின்று சிறப்பாக பணியாற்றினீர்கள். அப்பணியில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி தற்போது அதனின்று மீண்டு வந்துள்ளீர்கள். சவாலான பணியினை தைரியத்தோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் தாங்கள் மேற்கொண்டது மிகவும் பாராட்டுதலுக்குரியது. தங்கள் துணிவையும், தங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பையும் எண்ணி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பெருமிதம் கொள்கிறது” என்று வாழ்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி கூடுதல் எஸ்பி கோபி அவர்கள் உடனிருந்தார்.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்