76 F
Tirunelveli
Sunday, December 5, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் 17 லட்சம் மதிப்பிலான சாலை பாதுகாப்பிற்க்கு தேவையான பொருட்களை ‌ ஹைவே பேட்ரோல்...

தூத்துக்குடி மாவட்டத்தில் 17 லட்சம் மதிப்பிலான சாலை பாதுகாப்பிற்க்கு தேவையான பொருட்களை ‌ ஹைவே பேட்ரோல் பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு காவலர்களுக்கு எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்

தூத்துக்குடி செப்டம்பர் -16

தமிழக அரசு ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான சாலை பாதுகாப்பு உபகரணங்கள் ஒளிரும் மட்டை விளக்குகள் ஒளிரும் சட்டைகள் ஒளிரும் ஸ்டிக்கர் குடிபோதை சோதனை கருவி முக்கோண கூம்பு உள்ளிட்ட 12 வகையான உபகரணங்களை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளது.

மேற்படி 12 வகையான சாலை பாதுகாப்பு உபகரணங்களை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம், புதுக்கோட்டை, திருச்செந்தூர், செய்துங்கநல்லூர், கயத்தாறு, எப்போதும்வென்றான் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை ஆகிய தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் 7 ரோந்து வாகனங்களுக்கும், இது தவிர தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி போக்குவரத்து பிரிவுகளுக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களுக்கும் மற்றும் தனிப்பிரிவு அலுவகத்திற்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் வழங்கினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்படி உபகரணங்களை வாங்கி அப்படியே வைத்து விடாமல், இவற்றை சிறந்த முறையில் பராமரித்து உபயோகிக்க வேண்டும். நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் விழிப்புடன் செயலாற்றி, நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் நடக்கா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். அவ்வாறு நீங்கள் உதவும்போது உங்களை மற்ற வாகனங்கள் உங்கள் மீது மோதி விபத்தை நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் ஒளிரும் சட்டைகள், ஒளிரும் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அவற்றை நீங்கள் பயன்படுத்துவது உங்களுக்கு மட்டுமல்லாமல் பயணம் செய்பவர்கள் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்றும், காவல்துறையின் செயல்பாடுகள் மக்களுக்கு பயனள்ளதாக இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் வேலையை பொதுமக்கள் பாராட்டும் வகையில் இருக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு சார்பாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு சார்பாக உதவி ஆய்வாளர் வேல்முருகன், அனைத்து நெடுஞ்சாலை ரோந்து வாகன உதவி ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து உட்கோட்டங்களிலிருந்தும் ஒவ்வொரு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு உபகரணங்களை பெற்றுச் சென்றனர்.

19,724FansLike
55FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ரவுடிகளின்‌‌‌ செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட எஸ்பி தனிப்படை அமைப்பு

0
திண்டுக்கல் - டிச - 04,2021 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்கவும் அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் சிறப்பு தனிப்படைகள் - திண்டுக்கல் மாவட்ட காவல்...

மகளுக்‌‌‌கு பாலியல் தொந்‌‌‌தரவு – தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ் எஸ்பி அதிரடி...

0
அரியலூர் - டிச -04,2021 காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை: சிறுமியிடம் பாலியல் சீண்டல்கள் செய்த தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் தந்தையே தனது மகளை தொடர்ந்து பாலியல் சீண்டல்கள்...

கல்லூரி மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

0
திருவாரூர் - டிச -04,2021 விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌவுரவிப்பு மன்னார்குடி நகர...

சிசிடிவி கேமரா கண்காணிப்பு நகரமாக மாறிவரும் சேலம் – போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
சேலம் - டிச - 04,2021 சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய சரகத்தில் உள்ள ரெட்டிப்பட்டி, மாமாங்கம், குரங்குசாவடி, சங்கர் தியேட்டர், ஸ்டேட் பாங்க் காலணி, ஸ்வர்ணபுரி அனெக்ஸ், இந்திரா நகர், நகர்மலை...

காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில்‌‌‌ நடைபெற்றது

0
திருப்பத்தூர் - டிச - 03,2021 மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப காவல் பணியில் தரத்தினை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான இடைவெளியை போக்கவும் பணியின் தரத்தினை அளவிடுவது இன்றியமையாததாகும். திருப்பத்தூர் மாவட்ட காவல்...

தற்போதைய செய்திகள்