80.5 F
Tirunelveli
Monday, August 2, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்; உட்பட 7 காவல்துறையினருக்கு மாவட்ட...

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்; உட்பட 7 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி செப்டம்பர் -14

கடந்த 07.04.2016 அன்று ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் சம்மந்தபப்ட்ட எதிரிக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்ட முறப்பநாடு காவல் நிலைய குற்ற பிரிவு அயல்பணி: விமான நிலையம், வாகைக்குளம் ஆய்வாளர் திருமதி. விமலா, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் சுமதி மற்றும் பெண் முதல் நிலைக் காவலர் ஹெப்சி ஆகியோரின் சிறந்த பணிக்காகவும்,

கடந்த 10.09.2020 தாளமுத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கே.வி.கே சாமி நகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த சோலையப்பன் மற்றும் ராஜா ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்த 4 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தும், இவர்களுக்கு பணம் கொடுத்து கஞ்சா வாங்கிவரச் சொன்ன லதா என்பவரையும் கைது செய்ய உதவியாக இருந்த தாளமுத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜா மற்றும் காவலர் சிலம்பரசன் ஆகியோரின் சிறந்த பணிக்காகவும்,

ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்டப்பட்ட முக்காணி பகுதயில் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்ட்ட எதரிகளான மாரியப்பன் மற்றும் தங்கராஜை சம்பவம் நடைபெற்ற 8 மணி நேரத்திற்குள் கைது செய்ய உதவியாக இருந்த ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் மற்றும் தலைமைக் காவலர் ஜேக்கப் தங்கமோகன் ஆகியோரின் சிறந்த பணிக்காகவும்,

ஆய்வாளர் உட்பட 7 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

19,724FansLike
38FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“கொரனா தொற்றால் உயிரிழந்த போலீசாரின்‌‌‌ உருவபடத்‌‌‌திற்க்கு போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை….

0
சென்னை - ஆகஸ்ட் -01,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 19...

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி சம்பவயிடத்திற்கு விரைந்து...

0
காஞ்சிபுரம் - ஆகஸ்ட் - 01,2021 தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை - 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம்...

மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150,பேருக்கு மாவட்ட எஸ்.பி நிவாரன பொருட்களை வழங்கினார்

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 01,2021 தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புன்னை நகர் பகுதியில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150...

“தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சரகம் கடந்த 27.07.2021 அன்று 17.00 மணிக்கு வீராகான் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக மதுபோதையில் செதலவாடி...

“சாலை விபத்தில் இறந்த போலீசாரின் குடுமபத்திற்க்கு ஐ.ஜி ,மாவட்ட எஸ்.பி நிதியுதவி….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழப்பழுவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பணியின்போது சாலை விபத்தில் இறந்ததால் ஸ்டேட் பாங்க்...

தற்போதைய செய்திகள்