94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பொதுமக்களின் புகார்மனுக்களுக்கு உடனடியாக தீர்வுகானும் விதமாக எஸ்பி ஜெயக்குமார்...

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பொதுமக்களின் புகார்மனுக்களுக்கு உடனடியாக தீர்வுகானும் விதமாக எஸ்பி ஜெயக்குமார் ஏற்பாட்டில் சிறப்பு முகாம்

தூத்துக்குடி செப்டம்பர் -13

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று பொது மக்களின் புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வுகாணும் விதமாக முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் நடைபெறும் விசாரணையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அளித்துள்ள புகார் மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் உடனடி தீர்வு முகாம் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று தூத்துக்குடியில் ஜெயராஜ் ரோட்டில் உள்ள ராஜ் மஹாலில் நடைபெற்றது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெறுவதை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்ததாவது, மாவட்டத்தில் மனுக்கள் மீதான விசாரணை காலதாமதமாகிறது என்று புகார்கள் எனது கவனத்திற்கு வந்தது. ஆகவே மனுக்கள் மீது உடனடி தீர்வு காணும் வகையில் இந்த முகாம்களை நடத்த முடிவு செய்து, அதன்படி தூத்துக்குடி உட்கோட்டத்திற்கு தூத்துக்குடி ராஜ் மஹாலிலும், தூத்துக்குடி ஊரகத்திற்கு புதுக்கோட்டை சத்யா மஹாலிலும், ஸ்ரீவைகுண்டத்திற்கு குமரகுருபரர் நடுநிலைப்பள்ளியிலும், திருச்செந்தூருக்கு குறிஞ்சி மஹாலிலும், சாத்தான்குளத்திற்கு புலமாடன் செட்டியார் மேல் நிலைப்பள்ளியிலும், மணியாச்சிக்கு பசுவந்தனையில் உள்ள துர்கா மஹாலிலும், விளாத்திக்குளத்திற்கு பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியிலும் , கோவில்பட்டிக்கு ஆயுர் வைஸ்யா மேல் நிலைப்பள்ளிய ஆகிய இடங்களில் இந்த முகாம் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் பொதுமக்கள் அளித்துள்ள புகார்களுக்கு மனுதாரர் மற்றும் எதிர்மனுதார் ஆகிய இரு தரப்பினரையும் வரவழைத்து, சட்டத்திற்குட்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த முகாம் மாத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ மனுக்கள் தேக்கம் ஏற்படும்போது இது போன்ற உடனடி தீர்வு முகாம் நடத்தப்படும் என்றும், பதிவு செய்துள்ள வழக்குகளில் புலன் விசாரணை செய்து முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, வழக்கின் மீதான மேல் நடவடிக்கை நிறுத்தம் செய்யப்படும்போது, அவ்வழக்கின் மனுதாரர்களுக்கு அதற்கான காரணங்களை சட்டப்படி தெரிவித்து வழக்கு விசாரணை முடிக்கப்படுகிறது. அவ்வாறு காவல் நிலைய அதிகாரிகள் முடிக்கப்பட்டதில் குறைகள் இருந்தால் மேலதிகாரிகள் மற்றும் என்னிடம் புகார் அளிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்த முகாமில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்த ராஜன், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர் மற்றும் சம்மந்தப்பட்ட மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்