78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் இன்று ஒரே நாளில் 4 பேர் குண்டர்...

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் இன்று ஒரே நாளில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை.

தூத்துக்குடி செப்டம்பர் -11

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் இன்று ஒரே நாளில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை.

கடந்த 25.08.2020 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்வாய் பகுதியில் புளியங்குளத்தைச் சேர்ந்த செல்லையா மகன் முருகன்(31) என்பவரை ஸ்ரீவைகுண்டம் தெற்கு புதுத்தெருவைச் சேர்ந்த விஜயபாண்டி மகன் செல்லத்துரை(19) மற்றும் ஸ்ரீவைகுண்டம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் முத்துக்குமார்(24) ஆகியோர் சேர்ந்து சாதி பேரை சொல்லி அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லத்துரை மற்றும் முத்துக்குமாரை கைது செய்தனர். இவ்வழக்கின் எதிரியான மேற்படி செல்லத்துரை மற்றும் முத்துக்குமார் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன்

கடந்த 18.08.2020 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் கோவில்பட்டி காந்தி நகரைச் சேரந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை கோவில்பட்டி மந்தித்தோப்பு கணேஷ் நகரைச் சேர்ந்த காந்தாரிமுத்து மகன் கனகராஜ்(29) என்பவர் கத்தியால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது கொலை முயற்சி மற்றும் திருட்டு உள்ளிட்ட 9 வழக்குகள் உள்ளன. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கின் எதிரியான மேற்படி கனகராஜ் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் . ஐயப்பன்

கடந்த 29.08.2020 அன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேட்மாநகரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி ரவுடித்தனம் செய்து வந்த கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 6 வழக்குகளில் தொடர்புடைய ஸ்ரீவைகுண்டம் சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த தங்கையா மகன் முருகன்(43) என்பவரை ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கின் எதிரியான மேற்படி முருகன் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன் ஆகியோர் மாவட்ட எஸ்பிக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

அதன் அடிப்படையில் டிஎஸ்பி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிக்கையின் அளித்ததின் பேரில் 4 எதிரிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மேற்படி எதிரிகளான 1) ஸ்ரீவைகுண்டம் தெற்கு புதுத்தெருவைச் சேர்ந்த விஜயபாண்டி மகன் செல்லத்துரை(19), 2) ஸ்ரீவைகுண்டம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் முத்துக்குமார்(24), 3) கோவில்பட்டி மந்தித்தோப்பு கணேஷ் நகரைச் சேர்ந்த காந்தாரிமுத்து மகன் கனகராஜ்(29) மற்றும் 4) ஸ்ரீவைகுண்டம் சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த தங்கையா மகன் முருகன்(43) ஆகிய 4 எதிரிகளையும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் 4 எதிரிகளையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்