94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய...

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் 22 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பழக்கூடை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

தூத்துக்குடி செப்டம்பர்-08

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை எதிர்கொண்டு பொதுமக்களை காப்பதில் முன் களப்பணியாளர்களில் காவல்துறையின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி, மாட்ட காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வளர் ஞாதோஸ், தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய காவலர் . செந்தில்குமார், தூத்துக்குடி மத்திய போக்குவரத்துப் பிரிவு தலைமைக் காவலர் செல்வராஜ், வடபாகம் காவல் நிலைய பெண்காவலர் தங்க பூபதி, புதியம்புத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் வீரபெருமாள், திருச்செந்தூர் காவல் நிலையம் முதல் நிலை காவலர் மாரிச்செல்வம், காவலர் தகுசன், ஆறுமுகநேரி காவல் நிலையம் உதவி ஆய்வாளர் முகமது பைசல், சிறப்பு உதவி ஆய்வாளர் பாபுராஜ், பெண் தலைமை காவலர் கல்பனா, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் ஆனந்த பூமாரி, மணியாச்சி காவல்நிலைய பெண் முதல் நிலை காவலர் பாரதி, கயத்தார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் மாசார்பட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சத்தியசீலன், நாசரேத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், தூத்துக்குடி ஆயுதப்படை பெண் முதல் நிலை காவலர் பபிதா, காவலர்கள் காளிராஜ், முத்துகிருஷ்ணன், முகமது சபிக், சந்தோஷ் குமார் ஆகியோர் களப்பணியாற்றும் போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.

மேற்படி 22 காவல்துறையினருக்கு இன்று (08.09.2020) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பழக்கூடை வழங்கி ‘கொரோனா தொற்று நோய் மக்களுக்கு பரவாமல் தடுக்க தைரியமாக தாங்கள் முன்வரிசையில் நின்று சிறப்பாக பணியாற்றினீர்கள். அப்பணியில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி தற்போது விளையாட்டு மீண்டு வந்துள்ளீர்கள். சவாலான பணியினை தைரியத்தோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் தாங்கள் மேற்கொண்டது மிகவும் பாராட்டுதலுக்குரியது. தங்கள் துணிவையும், தங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பையும் எண்ணி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பெருமிதம் கொள்கிறது” என்று வாழ்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்