81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் திருட்டு அடியோடு இருக்ககூடாது காவல்துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் திருட்டு அடியோடு இருக்ககூடாது காவல்துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை

செப்டம்பர் –03

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது

(03.09.2020) காலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் நேரடி உதவி ஆய்வாளர்களுக்கு அறிவுரை கூட்டம்; மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த இடத்திலும் மணல் திருட்டு என்பதே இருக்கக்கூடாது எனவும், உதவி ஆய்வாளர்கள் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனி கவனம் செலுத்தி மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காவல்துறையினர் யாராவது மணல் திருட்டுக்கு உடந்தையாக இருந்தால், அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை போன்றவற்றை முற்றிலும் தடுக்க வேண்டும், அதே போன்று ரவுடித்தனம் செய்பவர்கள் மீதும், சட்ட விரோதமாக வெடி பொருட்கள் வைத்திருப்பவர்கள் என எந்த சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

மேலும் உதவி ஆய்வாளர்கள் பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், புகார் மனுக்களை விசாரிக்கும் முறை பற்றியும், காவல் நிலைய ஆவணங்களை பராமரிப்பது குறித்தும், காவல் நிலைய பணிகளை சட்டத்திற்குட்பட்டே மேற்கொள்ள வேண்டும் எனவும், குற்றவாளிகளை கைது செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்தும், காவல்துறை பொது மக்களின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்கவேண்டும் என்றும் கூறினார். இக்கூட்டத்தின் போது கூடுதல் எஸ்பி கோபி உடனிருந்தார

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்