86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாநகர பகுதியில் திருடுபோன தங்க நகை மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை மாவட்ட எஸ்பி...

தூத்துக்குடி மாநகர பகுதியில் திருடுபோன தங்க நகை மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உரிமையாளர்களிடம் நேரில் ஒப்படைத்தார்.

தூத்துக்குடி செப்டம்பர் -13

தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 08 தேதி அன்று தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி மணிமேகலை என்ற மல்லிகா (63) என்பவர், அவரது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் தூத்துக்குடி அண்ணாநகரில் முருகன் கோவில் அருகே ஆனந்தராஜ் என்பவர் வீட்டின் முன்பு கிழக்கிலிருந்து மேற்காக சென்று கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் மணிமேகலை என்ற மல்லிகாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றுள்ளார். இது குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கோவில்பட்டி காமநாயக்கன்பட்டி குருவிநத்தத்தைச் சேர்ந்த மரிய மைக்கேல் சேவியர் மகன் பிரான்சிஸ் (38) என்பவர் செயினை பறித்துச் சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து, அவர் பறித்துச் சென்ற 4 பவுன் தங்கச் செயினை பறிமுதல் செய்தனர்.

அதே தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முனியசாமிபுரத்தில் கடந்த 02 தேதி அன்று அதே பகுதியைச் சேர்ந்த மூக்காண்டி மனைவி திருமதி. சோமசுந்தரி (28) என்பவரும், அவரது தம்பி மனைவி கனக சுந்தரியும் ஆத்தூரிலிருந்து தூத்துக்குடிக்கு வந்து காமராஜ் கல்லூரி பஸ்-ஸ்டாப்பில் இறங்கி முனியசாமிபுரம் 2வது தெருவில் கிழக்கிலிருந்து செல்லும்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் சோமசுந்தரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துச் சென்றுள்ளார். இது சம்மந்தமாக தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி பிரையண்ட் நகர் 10வது (கிழக்கு) தெருவைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் சுரேஷ்குமார் (32) என்பவர் செயினை பறித்தது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.

மேலும் கடந்த 03ம்தேதி அன்று தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த முத்துராஜ் மகன் பாலமுருகன் (39) என்பவர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றபோது தனது இரு சக்கர வாகனத்தை மருத்துவமனையின் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு, பின்னர் வந்து பார்க்கும்போது, அதை யாரோ திருடிச் சென்றுள்ளார். இது குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர், விசாரணையில் ஏரல் அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த சின்னத்துரை மகன் அய்யப்பன் (31) மற்றும் சாயர்புரம் காட்டு சக்கம்மாள்புரத்தைச் சேர்ந்த முருகன் மகன் பிரதீப் (28) ஆகியோர் திருடியது தெரியவந்தது, அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேற்படி 3 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள 9 பவுன் தங்க நகைகளையும், இரு சக்கர வாகனத்தையும் அதன் உரிமையாளர்களிடம் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சியின்போது தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் திரு. ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் ஆகியோர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தற்போதைய செய்திகள்