94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி திரேஸ்புரத்தில் கடந்த 31ம்தேதி மர்மமான முறையில் இறந்துகிடந்த காளிமுத்து மரண வழக்கு குற்றவாளிகள்...

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் கடந்த 31ம்தேதி மர்மமான முறையில் இறந்துகிடந்த காளிமுத்து மரண வழக்கு குற்றவாளிகள் சிக்கியதால் கொலைவழக்காக மாற்றம்‌ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவு

தூத்துக்குடி செப் -27

தூத்துக்குடி, திரேஸ்புரம் மாதவர்காலணியைச் சேர்ந்தவர் கோபுரத்தான் மகன் காளிமுத்து (38) என்பவர் கடந்த 31ம்தேதி அன்று திரேஸ்புரம் கடற்கரையில் மர்மமான முறையில் இறந்த கிடந்தார். இதுகுறித்து அவரது சகோதரரான மாரிமுத்து என்பவர் அளித்த புகாரின் பேரில் 01ம்தேதி அன்று வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர் அருள் மற்றும் வடபாகம் போலீசார் தூத்துக்குடி கருப்பட்டி ஆபிஸ் சந்திப்பு அருகே ரோந்து செய்து வரும்போது அங்கு நின்று கொண்டிருந்த தூத்துக்குடி தாளமுத்துநகர் லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த ஜோக்கின்ஸ் மகன் மரிய ஜெர்மன் (20) மற்றும் தூத்துக்குடி திரேஸ்புரம் சங்குகுளி காலணி வெற்றிவேல்புரத்தைச் சேர்ந்த ராஜா மகன் ரபேக் வேதா (20) ஆகிய இருவரும் போலீசாரை பார்த்ததும் ஓடினர், போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை செய்ததில், மேற்படி இருவர்கள்;, அவர்களது கூட்டாளிகளான மற்ற 3 பேர்களுடன் சேர்ந்து கடற்கரையில் பிராந்தி குடிக்கும்போது காளிதாஸ், அவர்களை இங்கு ஏன் பிராந்தி குடிக்கிறீர்கள், பிராந்தி குடித்துவிட்டு பாட்டிலை உடைந்து இங்கேயே போட்டு விட்டுச் சென்று விடுகிறீர்கள் என்று சத்தம்போட்டுள்ளார். இதை பிடிக்காத இவர்கள் 5 பேரும் சேர்ந்து வல்லத்திற்கு அண்டை கொடுக்கும் கட்டையால் காளிதாஸை அடித்துக் கொன்றுள்ளனர். மேற்படி இருவர்கள் இவ்வாறு அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அதனடிப்படையில் வடபாகம் காவல் ஆய்வாளர் அருள் அவர்கள், மேற்படி காளிதாஸ் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து மேற்படி இருவரையும் கைது செய்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் ஐஐஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேற்படி இருவரின் கூட்டாளிகளான மற்ற 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

கடந்த 31ம்தேதி அன்று திரேஸ்புரம் கடற்கரையில் மர்மமான இறந்து கிடந்த காளிதாஸ் சந்தேக மரண வழக்கை சிறப்பாக புலன் விசாரணை செய்து 27 நாட்களுக்குப் பின் துப்பு துலக்கி கொலை செய்த மேற்படி இருவரையும் கைது செய்த வடபாகம் காவல் ஆய்வாளர் அருள் மற்றும் வடபாகம் காவல்துறையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்