78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் 4 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது -...

தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் 4 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது – தனிப்படையினருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு.

தூத்துக்குடி செப்டம்பர் -11

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் விதபாக மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அதிக கவனம் செலுத்தி மாவட்டம் முழுவதும் பல்வேறு தனிப்படைகள் அமைத்து தீவிரப்படுத்தியுள்ளார்.

இதன் விளைவாக கடந்த இரண்டு மாதங்களில் ஆங்காங்கே கஞ்சா, ‘சாரஸ்” மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும், அதற்குப் பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தும், பல குற்றவாளிகள் கைது செய்தும், பலர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டும் உள்ளார்கள்

இந்நிலையில் தூத்துக்குடி நகர‌ டிஎஸ்பி கணேஷின் மேற்பார்வையில தாளமுத்து காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் உதவி ஆய்வாளர் .மகாராஜன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தூத்துக்குடி கே.வி.கே சாமி நகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி தருவைக்குளம் ரோடு விவேகானந்தன் நகரைச் சேர்ந்த மகாராஜன் மகன் சோலையப்பன் (20) மற்றும் தூத்துக்குடி புதிய முனியசாமிபுரத்தைச் சேர்ந்த சங்கர் மகன் ராஜா (19) என்பதும் இவர்களிடம் தூத்துக்குடி சோட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்த விஜய் மனைவி லதா (31) என்பவர் பணம் கொடுத்து திண்டுக்கல்லில் இருந்து கஞ்சா வாங்கி வரச் சொன்னது தெரியவந்தது. அதன்படி சோலையப்பன் மற்றும் ராஜா ஆகியோர் திண்டுக்கல்லில் இருந்து கஞ்சா வாங்கி பேருந்தில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படையினர் லதா, சோலையப்பன் மற்றும் ராஜா ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்த 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்