81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பதுக்கி வைத்திருந்த இரிடியம் போன்ற பொருள் மற்றும்...

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பதுக்கி வைத்திருந்த இரிடியம் போன்ற பொருள் மற்றும் 2 வீச்சரிவாள்கள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் 4 பேர் கைது. கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டு.

தூத்துக்குடி செப் -27

தூத்துக்குடி, முத்தையாபுரம் தோப்புத்தெருவைச் சோந்த செல்வராஜ் என்பவரது மகன் தங்கம் (55) என்பவருக்கு, எதிரிகள் தாளமுத்துநகர், ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த அந்தோணி பிச்சை மகன் மரியதாஸ் (49) என்பவர் மற்றும் தூத்துக்குடி கதிர்வேல் நகர் 2வது தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முருகன் (47) என்பவர்கள் நன்கு அறிமுகமானவர்கள். இவர்கள் மேற்படி தங்கத்திடம், மற்ற எதிரிகளான சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்டனூர் காசியம்பலம் தெருவைச் சேர்ந்த சிங்கமுத்து மகன் வைத்தியலிங்கம் (60) மற்றும் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் புளியங்குடியைச் சேர்ந்த கருபண்ணன் மகன் முத்துராமலிங்கம் (45) ஆகியோர் இரிடியம் என்னும் பொருள் வைத்திருப்பதாகவும், அதை விற்றுக்கொடுத்தால் நல்ல கமிஷன் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்கள். அதனடிப்படையில் மேற்படி தங்கம் என்பவர், அவரது மகன் வினோத்குமாருடன் நேற்று (26.09.2020) இரவு தூத்துக்குடி எட்டயாபுரம் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது, அங்கு மேற்படி எதிரிகள் மரியதாஸ், முருகன் நின்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் இன்னோவா காரில் வந்த மற்ற எதிரிகளான வைத்தியலிங்கம் மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோர், தங்களிடம் உள்ள இரிடியம் என்னும் பொருளை தங்கத்திடம் விற்றுத்தருமாறு கேட்டுள்ளனர். இதில் சந்தேகமடைந்த தங்கம் விற்றுத் தர இயலாது என்று கூறியுள்ளார். உடனே அவர்கள் இது பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று அரிவாளை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து தங்கம் என்பவர் சிப்காட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன், உதவி ஆய்வாளர் சங்கர், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜன், புதியம்புத்தூர் தனிப்பிரிவு காவலர் விக்னேஷ் மற்றும் சிப்காட் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் கலைவாணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அவர்களை தேடி ரோந்து சென்றபோது இன்று காலை தாளமுத்து நகரிலுள்ள வட்டக்கோவில் அருகே மேற்படி இன்னோவா காரில் வந்தவர்களை மடக்கிப்பிடித்து, அவர்களிடமிருந்த திரவி நிலையில் இரிடியம் போன்ற பொருள் உள்ள 6 குப்பிகள் அடங்கிய சிறிய கண்டெய்னர் பெட்டி, மற்றும் இரிடியம் பற்றிய விபரங்கள் அடங்கிய குறுந்தகடு (CD), அரிவாள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இன்னோவர் கார் (TN 59 BB 0909) ஆகியவற்றை பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த குப்பிகளில் 144 மில்லி கிராம் இரிடியம் போன்ற பொருள் திரவ நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இதை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. கைது செய்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் தலைமையிலான தனிப்படையிரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தற்போதைய செய்திகள்