86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி சாத்தான்குளம் அருகில் வெடிகுண்டு வதந்தியால் பரபரப்பு எஸ்.பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு

தூத்துக்குடி சாத்தான்குளம் அருகில் வெடிகுண்டு வதந்தியால் பரபரப்பு எஸ்.பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு

செப்டம்பர் 2

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பன்னம்பாறை கிராமம், மெயின்ரோட்டைச் சேர்ந்த இசக்கி கோனார் மகன் நல்லகண்ணு (வயது 74) என்பவர் இன்று (02.09.2020) காலை தனது வீட்டின் காம்பவுண்டு முன்பக்கத்தில் ஒரு மர்ம பொருள் இருப்பதாக சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அவரது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஷ்குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. பெர்னாட் சேவியர், வெடிகுண்டு நிபுணர்கள் எஸ்.ஐ. குலசேகரன், மோப்ப நாய் சேரன் மற்றும் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்

மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சாத்தான்குளம் பன்னம்பாறை கிராமத்திற்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை சோதனை மேற்கொண்டதில், அது ஒரு பழைய தேங்காய் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சாத்தான்குளம், பன்னம்பாறையில் நல்லகண்ணு என்பவரது வீட்டின் முன் பக்கத்தில் சந்தேகத்திற்கிடமாக ஒரு பொருள் இருப்பதாக, அவர் சொன்னார். அதனடிப்படையில் அங்கு சென்று பார்த்ததில் தேங்காயில் நூல் சுற்றியிருந்தது, உடனே காவல்துறை வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சோதனை செய்ததில், அது நூல் சுற்றப்பட்ட தேங்காய் முடிதான், அதனை உடைத்துப் பார்த்ததில் எந்த விதமான வெடிபொருளோ, வேறு எதுவுமே கிடையாது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது -...

தற்போதைய செய்திகள்