84.7 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் மரக்கன்றுகள் நடுவிழா மற்றும்...

தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் மரக்கன்றுகள் நடுவிழா மற்றும் மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி செப்டம்பர் -14

வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் மரக்கன்றுகள் நடுவிழா மற்றும் மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது, அவரை தொடர்ந்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு இளங்கோவன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன், முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மரக்கன்றுகள் நட்டனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மரங்கன்றுகள் நடுவதற்கு தாலுகா வாரியாக தூத்துக்குடி நகரம், தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், மணியாச்சி, விளாத்திக்குளம் மற்றும் கோவில்பட்டி ஆகிய 8 தாலுக்காவிலும் மொத்தமாக சுமார் 400 மரக்கன்றுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்.

பின் கொடிய கொரோனா பாதிப்புகள் இருக்கும் இந்த சூழ்நிலையில் கூட கடமையுணர்வுடன் எவ்வித விடுப்பும் எடுக்காமல் மிகுந்த கஷ்டங்களுக்கிடையே சிறப்பாக பணியாற்றிய 14 தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் பணியை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசு வழங்கினார். பின் அவர்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், இந்த உலகத்தில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் தேவை. மேலும் நாம் சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறோம். உலகில் உள்ள அனைவரும் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றிக் கொண்டிருந்தால் சுத்தமான ஆக்ஸிஜனுக்கு நாம் எங்கு செல்வது? அதற்காகத்தான் இயற்கை, நமக்கு மரங்களை படைத்து அதன் மூலம் சுத்தமான ஆக்ஸிஜனை நமக்கு கொடுத்து, கார்பன்டை ஆக்ஸைடை மரங்கள் எடுத்துக் கொள்கிறது. மரங்கள் செடி, கொடிகளும் ஒரு உயிரினம் தான், அவைகளுக்கு உயிருள்ளது. இவற்றின் மூலமே நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். அதனால் நாம் அனைவரும் கண்டிப்பாக மரம் வளர்க்க வேண்டும் என்றும், காவல்துறையினராகிய நாம் பொதுமக்களுக்கு சேவையாற்றத்தான் வந்துள்ளோம், பொதுமக்களின் நலனே நமக்கு மிக முக்கியம் என்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகீர் உசைன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், நடராஜன், கிருஷ்ணமூர்த்தி சுனைமுருகன் மற்றும் தலைமை காவலர் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

போலி உதவி கமிஷனர் கைது – மாவட்ட எஸ்.பியின் ஸ்கெட்ச்

0
திண்டுக்கல் - ஆகஸ்ட் -03,2021 முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேரள முதல்வர் பிரணாப் விஜயன் தமிழகத்தை தவிர்த்து மற்றும் பல மாநில முதல்வர்களுடன் சந்தித்து போட்டோ எடுத்து அதை முகநூலில் பதிவு...

தற்போதைய செய்திகள்