80.5 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடியில் தொடரும் இரத்த பலிகள் அதிரடி காட்டும் எஸ்பி ஜெயக்குமார்

தூத்துக்குடியில் தொடரும் இரத்த பலிகள் அதிரடி காட்டும் எஸ்பி ஜெயக்குமார்

தூத்துக்குடி செப்டம்பர் -15

தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திடீர் ஆய்வு.

தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள தூத்துக்குடி தென்பாகம், மத்தியபாகம், வடபாகம், தாளமுத்துநகர், முத்தையாபுரம், தெர்மல் நகர், அனைத்து மகளிர் காவல் நிலையம், காவல் கட்டுப்பாட்டு அறை, தூத்துக்குடி மத்திய குற்றப்பிரிவு ஆகிய காவல் நிலையங்களின் முக்கிய வழக்கு கோப்புகளையும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடியில் ரவுடித்தனம், கஞ்சா போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படா வண்ணம் சீர் செய்யவும் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், காவல் நிலைய நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்திற்குட்பட்டு இருக்கவேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார். பின் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார். இந்த ஆய்வின்போது தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 68 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 26 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்ப்பட்டுள்ளனர். இதில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டவர்கள் 3 பேரும், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 2 பேரும், பாலியியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் 13 பேரும், சமூக வளைதளங்களில் ஜாதி மத ரீதியாக கலவரத்தை தூண்டும் வகையில் செய்தி, வீடியோ மற்றும் ஆடியோ பரப்பியவர் ஒருவரும் அடங்குவர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூபாய் 9,25,000 மதிப்புள்ள 95 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, 2 நான்கு சக்கர வாகனங்களும், 9 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்கள் 309 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 319 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூபாய் 35,23,000/- மதிப்புள்ள 66,922 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அதற்காக பயன்படுத்தப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்