81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தை கலக்கும் பெண் சிங்கம் எஸ்.பி ரவளிப்ரியா

திண்டுக்கல் மாவட்டத்தை கலக்கும் பெண் சிங்கம் எஸ்.பி ரவளிப்ரியா

திண்டுக்கல் செப் – 29

திண்டுக்கல் மாவட்ட புதியஎஸ்பி.,யாக ரவளிபிரியா பொறுப்பேற்றது முதல் குற்றங்கள் குறைந்து நிலுவையில் உள்ள கொலை வழக்குகளை விரைந்து முடிக்கப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் பலர் போலீஸ் எஸ்.பி., யாக பணியாற்றியுள்ளனர். இந்தாண்டுதான் முதன் முதலாக பெண் ஒருவர் எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவளிபிரியாதான் அவர்.திண்டுக்கல்லில் கலெக்டர், நீதிபதி, பதவியைப் போன்ற காவல் துறையின் உயர்பொறுப்பிலும் பெண் ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ்.பி.,யாக அதுவும் ஆந்திரா போன்ற வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டது வரவேற்பை பெற்ற அளவு, அவரிடம் எதிர்பார்ப்பும் மக்களுக்கு அதிகமாக இருந்தது.நிலுவை கொலை வழக்குகள்அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் 3 மாதங்களில் ரவளிப்பிரியாவும் அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக நிலுவை வழக்குகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

குறிப்பாக நிலுவையில் உள்ள கொலை வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர ஆர்வம் காட்டுகிறார்.அதில் ஒன்று ஓராண்டுக்கு முன் சி.பி.ஐ., அதிகாரி போல் நடித்து ஒரு வீட்டில் கொள்ளையடித்த வழக்கு முக்கியமானது.

திண்டுக்கல்லில் கடந்தாண்டு டாஸ்மாக்கில் பணிபுரியும் காளீஸ்வரன் என்பவர் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரி போல நடித்து பணம், நகைகள், ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. புகார் அளித்து ஓராண்டாகியும் வழக்கில் முன்னேற்றமே இல்லை. எஸ்.பி., ரவளிபிரியா வந்ததும் இந்த வழக்கு மீது அவரின் பார்வை விழுந்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் உலகநாதன், எஸ்.மாரிமுத்து, பாஸ்டின் தலைமையில் தனிப்படை அமைத்து வழக்கை துாசி தட்டினார்.

சி.சி.டி.வி., காட்சிகள், மொபைல் சிக்னல்கள், வந்து சென்ற வாகனங்களின் அடிப்படையில் துரித விசாரணை நடத்தி திருப்பூர் சென்று குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.6.5 கோடி மதிப்பிலான ஆவணங்கள், நகைகள், பணம், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சி.பி.ஐ., அதிகாரியாக நடித்த வங்கியின் ஓய்வு ஊழியரையும், வாகன ஓட்டுநரையும் பெங்களூரு சென்று கைது செய்தனர். தீவிரமான விசாரணை நடக்கிறது.

அடுத்து தாண்டிக்குடி கொலை குற்றவாளிகள் வழக்கு. திருமண வயது வராத இருவர் தங்கள் காதலுக்கு தடையாக இருந்த நபரை கொலை செய்தனர். விசாரணையில் முன்னேற்றம் இல்லாதநிலையில், தலைமறைவாக இருந்த ஜோடிகளை கைது செய்தனர். இதுபோல பல்வேறு நிலுவை வழக்குகள் மீதான விசாரணை துரிதப்படுத்தி குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை, குட்கா போன்றவற்றின் புழக்கம் அதிகமாக இருப்பதாக கிளம்பிய புகாரின் அடிப்படையில் எஸ்.பி.யின் தனிப்படை போலீசார் அதில் தீவிரம் காட்ட உத்தரவிடப்பட்டது. அதன்படி பலர் கைது செய்யப்பட்டு பலநுாறு கிலோ அளவில் கஞ்சா, புகையிலை, குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

36 வழக்குகள் மூன்றாகின

இதுவரை மொத்தமாக 81 பேர் மீது வழக்குகள், 126 குற்றவாளிகள் கைது, 102 வாகனங்கள் பறிமுதல் என நடவடிக்கை தொடர்கிறது. எட்டு பேர் மீது ‘குண்டாஸ்’ போடப்பட்டுள்ளது. ரவளிப்பிரியா எஸ்.பி.,யாக பொறுப்பேற்பதற்கு முன் 36 கொலை வழக்குகள் நிலுவையில் இருந்தன. மூன்றே மாதத்தில் அவை 3 வழக்குகளாக குறைக்கப்பட்டுள்ளன. அவையும் சில தினங்களுக்கு முன்பு நடந்தவையே.

இதுமட்டுமின்றி ‘கொரோனா’ பணியால் பாதிப்படைந்த போலீசார், மீண்டும் பணியில் சேரும் போது மலர் துாவி வரவேற்று, அவரே ரோஜா கொடுத்து வரவேற்றதால் போலீசாரின் அன்பை பெற்றுள்ளார்.ஆன்லைன் மூலமாக குற்றங்களை விசாரிப்பது, முதியவர்கள் வந்தால் அவரே முன்வந்து புகார் பெறுவது, கொடைக்கானல் மலைக்கிராமங்களில் நிவாரணம் வழங்கியது என செயல்படுகிறார்.

தினமும் மாவட்டம் முழுவதும் எல்லா நகரங்களுக்கும் பயணித்து சுறுசுறுப்பான செயல்களால் பலரையும் கவர்ந்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் குழந்தைகள் நல அமைப்புடன் இணைந்து செயல்படுகிறார்.எஸ்.பி.,யின் செயல்பாட்டிற்கு முழு சுதந்திரம் அளித்து உறுதுணையாக இருக்கிறார் டி.ஐ.ஜி. முத்துச்சாமி. அதேபோல், சில குற்ற வழக்கு விசாரணைகள் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. அதனையும் எஸ்.பி. கவனத்தில் கொள்ள வேண்டும்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்