86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பந்தமாக காவல்துறை சார்பில்...

செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பந்தமாக காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமூன்டிஸ்வரி மற்றும் எஸ்பி கண்ணன் தலைமையில் நடைபெற்றது

செங்கல்பட்டு செப்டம்பர் -12

இன்று செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பந்தமாக காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. .

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் சாமுண்டீஸ்வரி செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் மாவட்ட கூடுதல் எஸ்பி பொன்ராம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய சாமுண்டீஸ்வரி
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எவ்வாறு நிகழ்த்தப்படுகின்றன, அதிலிருந்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பவை பற்றி விரிவாக விளக்கிக் கூறினார். மேலும் குழந்தைகளுக்கு “நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் ” பற்றியும், பாலியல் சீண்டல்களில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் விளக்கினார்.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012, (போக்சோ சட்டம், 2012) எப்படி குழந்தைகளைப் பாதுகாக்கிறது, குழந்தைகள் மீது நடத்தப்படும் பல்வேறு வகையான வன்முறைகளுக்கான தண்டனைகள் என்னென்ன என்பவை பற்றி விளக்கப்பட்டன. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தையின் அடையாளம் முற்றிலும் இரகசியமாக காக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது என்றும், பெற்றோர்கள் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் எனவும்,உடனுக்குடன் காவல்துறையை அணுகி புகார் பதிவு செய்ய வேண்டும் என்றும் விளக்கப்பட்டன .

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எந்தெந்த வலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள், ஃபேஸ்புக் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள், யாருடன் உரையாடுகிறார்கள் என்பவைகளையும் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிகழ்வில் செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள நிறுவனங்களில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் ‘நல்ல தொடுதல் கெட்ட தொடுதல்” பற்றி சுவாரஸ்யமான முறையில் காணொளி காட்சிகள் மூலம் விளக்கப்பட்டது.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தற்போதைய செய்திகள்