91 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தும் அதை எதிர்கொள்ளும் விதம்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தும் அதை எதிர்கொள்ளும் விதம் குறித்தும் ஏஎஸ்பி சுந்தரவதனன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்டம் நெறும்பூர் கிராமத்தில் இன்று குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பந்தமாக காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் மாமல்லபுர காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. .

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எவ்வாறு நிகழ்த்தப்படுகின்றன, அதிலிருந்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பவை பற்றி விளக்கப் பட்டன . மேலும் குழந்தைகளுக்கு “நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் ” பற்றியும், பாலியல் சீண்டல்களில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் விளக்கப்பட்டன.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012, போக்சோ சட்டம், 2012எப்படி குழந்தைகளைப் பாதுகாக்கிறது, குழந்தைகள் மீது நடத்தப்படும் பல்வேறு வகையான வன்முறைகளுக்கான தண்டனைகள் என்னென்ன என்பவை பற்றி விளக்கப்பட்டன. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தையின் அடையாளம் முற்றிலும் இரகசியமாக காக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது என்றும், பெற்றோர்கள் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் எனவும்,உடனுக்குடன் காவல்துறையை அணுகி புகார் பதிவு செய்ய வேண்டும் என்றும் விளக்கப்பட்டன .

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எந்தெந்த வலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள், ஃபேஸ்புக் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள், யாருடன் உரையாடுகிறார்கள் என்பவைகளையும் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும் குழந்தை திருமணம் தண்டனைக்குரிய குற்றம் என்றும் அதன் தீமைகள் பற்றியும் விளக்கப்பட்டன .

இதில் திருக்கழுக்குன்றம் மற்றும் நெரும்பூரை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பெண்களும் குழந்தைகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு மாவட்ட அலுவலர் பொன்ராம் கூடுதல் எஸ்பி மற்றும் மாமல்லபுர ஏஎஸ்பி சுந்தரவதனன்ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சென்னையை சேர்ந்த டைரக்ஸன் என்ற தொண்டு நிறுவனம் குழந்தைகளுக்கு ‘நல்ல தொடுதல் கெட்ட தொடுதல்” பற்றி சுவாரஸ்யமான முறையில் காணொளி காட்சிகள் மூலம் விளக்கினார்கள்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்