81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு கேரளாவிற்கு கடத்த முயன்ற 176 கிலோ கஞ்சா பறிமுதல். 3 வாகனங்கள் பறிமுதல். 2 பேரை...

கேரளாவிற்கு கடத்த முயன்ற 176 கிலோ கஞ்சா பறிமுதல். 3 வாகனங்கள் பறிமுதல். 2 பேரை கைது. 3 பேர் தலைமறைவு.

தேனி செப் -22

கம்பம் கேரள மாநில எல்லையையொட்டி அமைந்துள்ளதால் கஞ்சா கடத்தல்காரர்கள் கம்பம்மெட்டு, மலைப்பாதை வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவில் இருந்து கம்பம் வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக தேனி மாவட்ட எஸ்.பி.சாய்சரண் தேஜஸ்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிலைமணி எஸ்.ஐ. திவான் மைதீன் தலைமையிலான போலீஸார் கம்பம் அரசு போக்குவரத்து பணிமனை அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது சந்தேகப்படும் படியாக வந்த கார் மற்றும் பிக்-அப் வேன் மோட்டார் சைக்கிளை மறித்து சோதனையிட்டனர். சோதனையின்போது 176 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது பின்னர் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார். விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் கம்பம் உலக தேவர் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் (45), விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த குபேந்திரன் (37), கோம்பை ரோட்டைச் சேர்ந்த மலைச்சாமி, கண்ணன், உலகத் தேவர் தெருவைச் சேர்ந்த காளி (எ) காளிராஜ் என்பதும் கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்றது தெரியவந்தது. பின்னர் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பிக்கப் வேன், மோட்டார் சைக்கிளில் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகன் ,குபேந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மலைச்சாமி, கண்ணன் ,காளி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

தற்போதைய செய்திகள்