86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் சென்னை கூடுதல் காவல் துறை இயக்குனர் சீமா அகர்வால் தலைமையில் சென்னை பெருநகர காவலில் உள்ள குழந்தைகள்...

கூடுதல் காவல் துறை இயக்குனர் சீமா அகர்வால் தலைமையில் சென்னை பெருநகர காவலில் உள்ள குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு 2ம் நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை செப் -27

செய்தியாளர் – H.M ரிஸ்வான்

கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், இ.கா.ப. அவர்களின் தலைமையில், சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ் குமார் அகர்வால், வழிகாட்டுதலின் பேரில் இளம் சிறார் நீதிச்சட்டம் (பராமரிப்பும் பாதுகாப்பும்)-2015, பாலியல் குற்றங்களிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 மற்றும் குழந்தைகளுக்காக இதர சட்டங்களில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற தெற்கு மண்டல குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் துணை கமிஷ்னர்.ஜெயலஷ்மி மேற்பார்வையில் இன்று (26.09.2020) 2வது நாள் பயிற்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர்களான இசபெல்,பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பதாகைகள், வில்லைகள், துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றை குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு வழங்கியும் சைல்டு வெல்பேர் கமிட்டி (CWC) மற்றும் காவல் அலுவலர்களுக்கான நடைமுறைகள் குறித்து விளக்கியும், .ஆதிலஷ்மி, வழக்கறிஞர் மற்றும், ஆன்ட்ரு ஜேசுராஜ், டேவிட் ஆகியோர் குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்தும் நடைமுறைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர்.

மேலும், சண்முகப்பிரியா (தலைவர்-JJB), ரேகா (LPO) ஆண்ட்ரூஸ் அபிரகாம், வித்யா ரெட்டி, சூரியகலா (DCPO), தமிழ்செல்வி (CWC), தி.ரேச்சல், Dr. கோமளா ஆகியோர் குழு உரையாடலில் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் இப்பயிற்சியில் ஒரு பகுதியான குழு விவாதத்தில் கலந்து கொண்டு குழந்தைகள் நல காவல் அதிகாரிகள் குழந்தைகள் நலத்துடன் தொடர்புடைய இதர துறையினருடன் இணைந்து எவ்வாறு பணிபுரிய வேண்டும் என்பதனை விளக்கி சிறப்புரை ஆற்றினார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தற்போதைய செய்திகள்