81.5 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு தமிழ்நாடு குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க க்ரைம் டிராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம் என்கிற புதிய...

குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க க்ரைம் டிராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம் என்கிற புதிய சேவை அறிமுகம் அதன் குறித்த விளக்க கூட்டத்தை திருச்சி கமிஷ்னர் லோகநாதன் நடத்தினார் உடன் துணை கமிஷ்னர்கள் பவன்குமார் ரெட்டி மற்றும் வேதரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்

திருச்சி செப் -28

செய்தியாளர் – எஸ் எம் பாரூக்

திருச்சிமாநகரில் குற்ற வழக்குகளை விரைந்து புலன் விசாரணை செய்து, உரிய நேரத்தில் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு நீதியும் மற்றும் குற்றவாளிகளுக்கு கதண்டனையையும் பெற்றுத்தரவேண்டும் என்றநோக்கத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் திருச்சிமாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பணிபுரியும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை இணைக்கும் க்ரைம் மற்றும் கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க்கிங் சிஸ்டம் கணிணி இயக்குநர்கள் மற்றும் கோப்பு பதிவு காவலர்களை அடையாளம் கண்டுஅவர்களை உதவி புலன் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டும், அவர்களுக்கு சட்டம் மற்றும் புலன் விசாரணை சார்ந்த துறை வல்லுநர்களை கொண்டு மூன்று நாள் பயிற்சி வகுப்புகள் 24.09.2020 முதல் 26.09.2020 வரை திருச்சிமாநகரம், கே.கே.நகர் ஆயுதப்படை வளாகம், சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. திருச்சி போலீஸ் கமிஷ்னர் லோகநாதன் முதல் நாள் வகுப்பை தொடங்கிவைத்து, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். இவ்வகுப்பில் உதவி புலனாய்வு விசாரணை அதிகாரிகள் 73 பர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மேலும், இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை கமிஷ்னர் பவன்குமார் ரெட்டி திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை கமிஷ்னர் வேதரத்தினம் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
முதல் வாரத்தில் புலன் விசாரணைப் பற்றிய பொதுப்படைத்தன்மையையும்,
சிறுகாய வழக்குகள் மற்றும் வாகனவிபத்து வழக்குகளை எப்படி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் விளக்கமாக சொல்லப்பட்டதுடன், அனைவரும் ஒரு வழக்கைப் பற்றி விரிவாக விசாரணையை மேற்கொண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது. இது ஒவ்வொரு வாரமும் மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறுவதுடன் அனைத்து வகையான வழக்குகளும் எடுத்துக் கொள்ளப்படும். பயிற்சியின் முடிவில் இவ்வழக்குகளில் கடைசியாக சரிபார்த்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான சரிபார்ப்புபட்டியல் அளிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் காவல் ஆளிநர்கள் தங்களின் பணியான உதவி புலன் விசாரணை அதிகாரி என்பதை உணர்ந்து மேலும் சிறப்பாகவும், ஈடுபாட்டுடனும் புலன் விசாரணை அதிகாரிக்கு உறுதுணையாகவும், புலன் விசாரணையின் தன்மையை மேலும் பலப்படுத்தும் விதமாகவும் இருக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
இப்பயிற்சியானது மேலும் விரிவுபடுத்தப்பட்டு உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உதவிஆணையர்களுக்கும் அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்